ஒரு அழகிய காட்டில், அவலட்சணம் கொண்ட, பார்ப்பதற்கே மிகவும் அருவெறுப்பான ஒரு மரம் இருந்தது. அதனை சுற்றிலும் மிகவும் கம்பீரமான, நல்ல உயரமான அழகிய மரங்கள் இருந்தன. இந்த மரங்கள் அந்த அவலட்சணமான மரத்தை அவமானப் படுத்தி சிரிப்பதே தின வேலையாக கொண்டிருந்தன.
இந்த அவலட்சண மரமும், தாழ்வு மனப்பான்மையில் நொந்து துடித்தது. என்ன வாழ்க்கை இது? ஏன் கடவுள் என்னை மட்டும் இவ்வளவு அவலட்சணமாக படைத்தார்? என அதிக கவலைப் பட்டது. நாட்கள் சென்றன.
ஒருநாள், ஒரு மரவெட்டி அந்த காட்டிற்கு வந்தான். வளர்ந்து செழித்த அனைத்து மரங்களையும் பார்த்து, தனக்கு இன்று நல்ல வருமானம் என மகிழ்ந்து, ஒவ்வொரு மரமாக வெட்ட ஆரம்பித்தான். இந்த அவலட்சணமாக மரத்தை பார்த்ததும், வேண்டாம் என ஒதுக்கி விட்டு, மற்ற அனைத்து மரங்களையும் வெட்டி, எடுத்துக் கொண்டான்.
இதனை கண்ட அந்த அவலட்சண மரம், தன் உயிரை காப்பாற்றிய தன் உருவத்தின் உன்னதத்தை உணர்ந்து, கடவுளுக்கு மனதார நன்றி கூறியது.
நாம் பிறரோடு ஒப்பிட்டு வருந்தும் செயல், தேவை இல்லாத மாயை. இவ்வுலகில் பிறந்துள்ள ஒவ்வொரு உயிரினமும் தனித்துவம் கொண்டது. பிறரோடு ஒப்பிட்டு உங்களை நீங்க தாழ்த்த வேண்டிய அவசியம் இல்லை.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.