நீர் தாங்கி ஒன்று, இரண்டு பெரிய பானைகளை கொண்டிருந்தது. ஒரு கம்பத்தின் ஒவ்வொரு முனையிலும் ஒவ்வொன்றும் தொங்கவிடப்பட்டிருந்தது. பானைகளில் ஒன்று, அதில் ஒரு விரிசலைக் கொண்டிருந்தது. மற்ற பானை சரியாக இருந்தது. இந்த நீர் தாங்கியை பயன்படுத்தி பணியாளர் ஒருவர், நீரோட்டத்திலிருந்து எஜமானரின் வீட்டிற்கு நீண்ட நடைப்பயணத்தில் இரண்டு பானைகள் நிறைய நீரினை தினம் கொண்டு வருவார். வெடித்த பானை பாதி நிரம்பியது.
இந்த செயல் தினமும் இரண்டு வருடங்களாக தொடர்ந்தது. பணியாளர் எஜமானரின் வீட்டில் ஒன்றரை பானைகள் தண்ணீர் வழங்கினார். சரியான பானை அதன் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொண்டது. ஏழை விரிசல் பானையை தினமும் இந்த சரியான பானை அவமான படுத்தியது. ஏழை விரிசல் பானையை அதன் சொந்த இயலாமையை நினைத்து வெட்கப்பட வைத்தது இந்த சரியான பானை. செய்ய முடிந்தவற்றில் பாதியை மட்டுமே சாதிக்க முடிந்தது என்பதில் பரிதாபமாக இருந்தது இந்த ஏழை விரிசல் பானை.
இது ஒரு கசப்பான தோல்வி என நினைத்த அந்த ஏழை விரிசல் பானை, ஒரு நாள் நீரோடையில் இருந்து வரும் வழியில் நீர் தாங்கியவரிடம் பேசியது. “நான் என்னைப் பற்றி வெட்கப்படுகிறேன், நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்”. என்றது.
“ஏன்? நீ எதைப் பற்றி வெட்கப்படுகிறாய்? ” என தாங்கி கேட்டார். “கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னால் எனது சுமைகளில் பாதியை மட்டுமே வழங்க முடிகிறது. ஏனென்றால், என்னிடம் ஏற்பட்ட இந்த விரிசல் உங்கள் எஜமானரின் வீட்டிற்கு திரும்பிச் செல்லும் வழியெல்லாம் தண்ணீர் வெளியேறுகிறது. எனது குறைபாடுகள் காரணமாக, உங்கள் முயற்சிகளுக்கு நீங்கள் முழு மதிப்பைப் பெற இயலவில்லை”, என்றது அந்த ஏழை விரிசல் பானை.
தண்ணீர் தாங்கியவர் பழைய விரிசல் பானையின் அறியாமையை நினைத்து வருத்தப்பட்டார். மேலும் ஏழை விரிசல் பானையின் அறியாமையை போக்க , “நாம் எஜமானரின் வீட்டிற்குத் திரும்பும்போது, பாதையில் அழகான பூக்களை நீ கவனிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.” என்றார்.
அவர்கள் மலையின் மேலே சென்றபோது, பழைய விரிசல் பானை, பாதையின் ஓரத்தில் அழகான காட்டு பூக்களை கவனித்தது. இது ஓரளவு உற்சாகத்தை அதற்கு கொடுத்தது. ஆனாலும், அது நீரை வெளியேற்றியதற்காக மீண்டும் தண்ணீர் தங்கியவரிடம் மன்னிப்புக் கோரியது.
தண்ணீர் தாங்கியவர் பானையை நோக்கி, “உன் பாதையின் பக்கவாட்டில் மட்டுமே பூக்கள் இருப்பதை நீ கவனித்தாயா?, ஆனால் மற்ற பானையின் பக்கத்தில் இந்த பூக்கள் இல்லை? ஏனென்றால், உன் குறைபாட்டை நான் எப்போதும் அறிந்திருக்கிறேன். நான் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டேன். பாதையின் உன் பக்கத்தில் நான் மலர் விதைகளை நட்டேன். ஒவ்வொரு நாளும் நாம் ஓடையில் இருந்து திரும்பிச் செல்லும்போது, நீ அவற்றிக்கு நீர் பாய்ச்சியுள்ளாய். இரண்டு ஆண்டுகளாக எனது எஜமானரின் வீட்டை அலங்கரிக்க இந்த அழகான பூக்களை எடுக்க முடிந்தது. நீ எப்படி இருக்கிறாயோ அப்படி இல்லையென்றால், அவருடைய வீட்டிற்கு இவ்வளவு அழகு கிடைத்திருக்காது. ” என்றார்.
இதனை கேட்ட இந்த ஏழை விரிசல் பானை உண்மை புரிந்த ஆனந்தத்தில் மகிழ்ந்தது. சரியான பானை ஏற்கனவே இந்த விஷயத்தை அறிந்திருந்தது. ஆனால், ஏழை பானையை உணர்ச்சி துஷ்பிரயோகம் செய்து தன் கட்டுப் பாட்டில் வைக்க, ஏழை பானைக்கு தவறான, உண்மை அற்ற மாயை எண்ணத்தை ஏற்படுத்தி இருந்தது. உண்மை வெளிப்பட்டதை அறிந்து, சரியான பானை, வெட்கி தலை குனிந்தது.
இந்த சரியான பானையை போல, உங்களை எவரேனும் உணர்ச்சி துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கலாம்.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான குறைபாடுகள் உள்ளன. ஒவ்வொருவருமே வெடித்த பானைகள் போன்றவர் தான். இறுதியில், இந்த வெடித்த பானையால் முடிந்தது, சரியான பானையால் முடியாமல் போனது. சரியான பானையும் ஒரு விதத்தில் வெடித்த பானை தான். இந்த உலகில், எதுவும் வீணாகப் போவதில்லை. உங்கள் வாழ்க்கையில், சிலவற்றில் நீங்கள் திறமையற்றவர் அல்லது பயனற்றவர் என்று நீங்கள் நினைத்து கொண்டிருக்கலாம். ஆனால் இந்த குறைபாட்டை ஆசீர்வாதமாக மாற்றும் திறனும் இந்த இயற்கையில் ஒளிந்துள்ளது. தேவை மாயை எண்ணத்தில் இருந்து விடுதலை. பிறரால் உணர்ச்சி துஷ்பிரயோகம் செய்யப் படாமல் இருக்க விழிப்பு நிலை.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.