சூழ்நிலைக்கு எப்படி சரியான விதத்தில் பதிலளிக்க வேண்டும்? என்ற தெளிவுடன் பிறரை நீங்க அணுக, உறவு & நட்பு முறிவுகளை தவிர்க்க, அதிக சுயநலத்துடன் பிறரை நீங்க அணுகாமல் இருக்க, ‘பிறரின் உணர்வுகளை’ நீங்க புரிந்து நடங்க.
நீங்க பிறரின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ள கூடியவரா? என அறிய 6 அறிகுறிகள் இருக்கு. அவற்றை இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.
“நீங்க இருக்கும், நினைக்கும் கண்ணோட்டத்தில்” இருந்து வெளிவந்து பிறர் நிலைகளில் இருந்து அடிக்கடி யோசிக்கும் பழக்கம் உடையவரா? நீங்கள்! பிறரின் உணர்வுகளை தெளிவாக புரிந்துகொள்ள உங்களால் முடியும்.
எதிர்தரப்பில் இருப்பவர் என்ன நினைக்கிறார்? என யோசித்து அவரின் மன எண்ணங்களை சரியாக அவர் நினைப்பது போலவே உள்வாங்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? என நினைத்துப் பாருங்க. பிறர் உணர்வுகள் புரிந்தவர் நீங்கள்.
ஒருவரை பற்றி யூகிக்க, அறிவு பூர்வமாக நீங்க யோசித்தாலும், மனித தன்மையுடன் அவரை அணுகும் பழக்கம் உங்களுக்கு உண்டா? பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ள உங்களால் முடியும்.
பல வித உணர்வுபூர்வமான கேள்விகளை பிறர் சார்பாக மனதில் எழுப்ப பழக்கப் பட்டவரா நீங்க? என நினைத்துப் பாருங்க.
பிற மனிதர்கள் பற்றிய உங்களுடைய ஆர்வம் அதிக அளவில் உள்ளதா? ( Build A Healthy Relationship ) என யோசித்துப் பாருங்க. பிறரின் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும் பொழுது பிறரின் உணர்வுகளையும் உங்களால் புரிந்துக் கொள்ள முடியும்.
சிலருக்கு, ‘தன் சுய வாழ்வில் ஏற்படும் தடுமாற்றம்’ பிறர் உணர்வுகளை புரிந்துகொள்ள “சந்தர்ப்பமாக, வாய்ப்பாக” அமைந்து விடும்.
பிறர் மீதான ‘பல நியாயமற்ற கோபங்கள்’ பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் பொழுது தவிர்க்கப்படும்.
பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ள உங்க நேரத்தை சிறிது செலவிட உங்களால் முடிந்தால் உங்களுடைய இந்த மனிதத்தன்மை பிறரை மட்டும் இன்றி உங்களையும் வாழ வைக்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.