ஒரு நாட்டின் அரசர் எப்பொழுதும் கவலைப் பட்டு கொண்டே இருந்தார். வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் சாதாரண குடிமகனைப் போல, கவலைப் பட்டு கொண்டே இருந்தார். அவரால் சிரிக்க முடியவில்லை. அவர் முகத்தில் எவரும் சிரிப்பை பார்த்தது இல்லை. அதனால் மக்களுக்கு எந்த நன்மைகளும் அவரால் செய்ய முடியவில்லை.
தினம் அரசவையில் தன் கவலைகளை அமைச்சர்களிடம் கூறுவதே இவரின் வேலை. இதனை உணர்ந்த அமைச்சர்கள் அரசருக்கு சரியான விதத்தில் புரியவைக்க நினைத்தனர்.
அடுத்தநாள் அரசவையில், அரசர் இன்று என்னுடைய கவலை என்னவெனில்… என ஆரபித்தார். உடனே, மூத்த அமைச்சர் ஒருவர், மன்னா! தங்களில் பிரச்சனை என்னவென்று நான் அறிவேன்’ என்றார்.
அரசர் ஆச்சரியமாக, ‘ நான் என் கவலையை இன்னும் கூறவில்லையே! எப்படி உங்களுக்கு தெரிந்தது?’ என கேட்டார். அதற்கு அமைச்சர்,’உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கூட எனக்கு தெரியும்’ என்றார்.
அரசர்,’பிரச்சனையை நான் கூறாமல், உங்களுக்கு தீர்வு கூட தெரியுமா? எப்படி?’ என்றார்.
அமைச்சர், ‘உங்களுடைய பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு தான் அரசே!’ என்றார்.
அரசர்,’ ஒரே தீர்வா? என்ன அது?’ என கேட்டார்.
அமைச்சர், ‘தீர்வு என்ன என கவலை படாதீர்கள். அது தான் தீர்வு’ என்றார்.
அரசர்,’ எப்படி தீர்வுக்காக கவலை படாமல் இருக்க முடியும்?’ என கேட்டார்.
அமைச்சர்,’இதுவரை எந்த பிரச்சனைக்காவது நீங்கள் தீர்வு கண்டு பிடித்துள்ளீர்களா?’ என கேட்டார்.
அரசர்,’இல்லை’ என்றார்.
அமைச்சர்,’கவலை படுவதால் தீர்வு கிடைக்கவில்லை எனில் பின் ஏன் கவலை பட வேண்டும்? வாழ்க்கை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக. தாங்கள் மிக்க அறிவு கொண்டவர். உங்களுடைய அறிவை கொண்டு உங்களால் எங்களை நல்ல விதத்தில் வழிநடத்த இயலும்.’ என்றார்.
அரசருக்கு தான் இவ்வளவு காலம் அறியாமையில் இருந்தது புரிந்தது. அன்று முதல் மகிழ்ச்சியுடம் வாழ ஆரம்பித்தார்.
பிரச்சனைகளுக்கான தீர்வு கவலைப் படுவதில் இல்லை.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.