ஒரு ஜென் துறவி, தன் சீடரிடம் குளிப்பதற்காக தண்ணீர் எடுத்து வர சொன்னார். சீடரும் தண்ணீரைக் கொண்டு வந்தார். துறவி குளித்து முடிந்தார். சீடர் மீதம் இருந்த தண்ணீரை தரையில் வீசினார். இதனை கண்ட அந்த துறவி, ‘தரையில் வீசிய தண்ணீரை, கோவில் செடிகளுக்கு ஊற்றி இருக்கலாம்’, என்றார்.
உங்க வாழ்க்கையும், இந்த தண்ணீரை போன்றது தான். தரையில் வீசப்பட்ட தண்ணீரை போல, வாழ்க்கை, வீணடிக்கப் பட வேண்டுமா? அல்லது கோவில் செடிகளுக்கு தண்ணீர் பயன் படுவது போல, ஒரு நல்ல நோக்கதிற்காக வாழ்க்கையை பயன் படுத்த வேண்டுமா? என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
எந்த திசையை நோக்கி பயணம்? என்ற தெளிவு இல்லா பயணத்தில் கிடைக்கும் அனுபவம், வசந்தமே என்றாலும், ஆனந்தமாக இருக்குமா? யோசித்துப் பாருங்கள்.
பல தடைகள் கடந்தாலும், புதையலை தேடி பயணித்துப் பாருங்கள். நோக்கம் உள்ள பயணத்தில், சுவாரசியம் தென்படும்.
பேரார்வமே நோக்கமாக இருக்கும் பொழுது, பிறவி பயனை அடைந்த திருப்தி கிடைக்கும்.
அர்த்தமுள்ள வாழ்க்கை வேண்டுமெனில், வாழும் வாழ்க்கைக்கு நோக்கம் வேண்டும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.