சந்திரனுக்கு வேலை பளு அதிகம். இரவு படுக்க செல்வது 1 மணி அளவில். காலையில் எழுந்திரிப்பதோ 5 மணிக்கு. இது தான் அவரின் தினசரி தூக்க அளவு. நாட்கள் சென்றன. உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு என உடலை நோயற்று வைத்து கொள்ள, என்ன வேண்டுமோ அனைத்தையும் சரியாக செய்தார்.
ஒரு நாள், மாலை திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டார். 35 வயது தான் இருக்கும் அவருக்கு. தீடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்தார். அவருக்கு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை? பின் எப்படி இறந்தார்?
அவர் சிறிய விஷயம் என நினைத்து செய்த மிக பெரிய தவறு, சரியான அளவிலான 7 ல் இருந்து 9 மணி நேர தின தூக்கம் இல்லாமை. உடல் இயக்கம் சரியாக நடை பெற, சரியான தின தூக்கம் மிக அவசியம். தூக்கத்தை குறைப்பது, இயற்கைக்கு எதிர்ப்பானது.
இந்த சந்திரனை போல, இன்றைய நாட்களில், பலர் தூக்கத்தை தவிர்த்து வாழ்கின்றனர். மிக பெரிய எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விடும். விழிப்புணர்வு அவசியம்.
தூக்கத்தை இழந்து, அப்படி என்ன சாதித்து விட முடியும்? வாழ்நாட்களை இழந்து, என்ன சாதித்து என்ன பலன்?
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.