பள்ளிக்கு செல்லும் பொழுது, தந்தை தன் இரு சக்கர வாகனத்தில் உங்களை பள்ளியில் இறக்கி விட்டால் எப்படி இருக்கும்? சுகமாக இருக்கும். இதே, நிலை மாறி, உங்களுக்கு என ஒரு சைக்கிளிலே, முதல் முறையாக, நீங்களே பள்ளிக்குச் செல்லும் பொழுது எப்படி இருக்கும்? உங்களை அறியாமல் ஏற்படும் புது நம்பிக்கை! உங்களால் முடியும் என்ற இந்த நம்பிக்கை, சுகத்தை தாண்டிய அலாதி சுகமாக இருக்கும்.
ஒருவரை சார்ந்து வாழும் உயிரை, யாரையும் சாராமல், தனித்து நிற்க பழக்குவது, அன்பு குறைவினால் அல்ல, அன்பு மிகுதியால். பிறர் சாரா வாழ்வை முடித்த வரை நீங்க பழகினால், உங்களை சார்ந்தோருக்கும் நீங்க பழக்கினால், வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும்.
‘ஒரு நாளில் எத்தனை முறை உங்களால் யாரையும் சாராமல் செயல் பட முடிகிறது? அத்தனை முறை உங்கள் தன்னம்பிக்கை துளிர் விடும்.’
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.