‘பேசிய வார்த்தைகளை விட, பேசாத வார்த்தைகளுக்கே மதிப்பதிகம்!’ என கேள்விப் பட்டு இருப்பீங்க.
பேசுவதன் மூலமாக 100 மடங்குகள் சாதிக்க முடியும் எனில் பேசாமல் 1000 மடங்குங்கள் சாதிக்க முடியும்.
அமைதியாக இருந்து உங்களால் அதிகமாக சாதிக்க முடியும். எப்படி? என இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்துகோங்க.
பிறருடன் நீங்க முரண்படும் பொழுது, ‘கருத்து பரிமாற்றத்திற்கு பலனில்லை’ என்ற சூழலில், முரண்பட்டு விவாதிப்பதற்கு பதிலாக, அமைதியாக இருந்திடுங்க! பலன்கள் அதிகம்.
அமைதியான சூழல்கள் கிடைக்கும் பொழுது உங்களுக்குள் நீங்க அமைதியாக கவனிக்க ஆரம்பிங்க. பல புரிதல்கள் உங்களுக்குள் ஏற்படும்.
தேவை இல்லாமல் அதிகமாக பேசும் பொழுது, உங்களுடைய ஆற்றல் வீணாகும். 10 வரிகள் பேசுவதால் கிடைக்கும் பலனை 2 வரிகள் மட்டும் பேசி உங்களால் பெற முடியுமா? என பாருங்க. தேவை இன்றி உங்க உடல்/ மன ஆற்றல் வீணாவதை தடுப்பீங்க.
ஒருவர், மிக ஆர்வமாக ஆறுதலை தேடி, ஒரு விஷயத்தை உங்களிடம் தெரியப் படுத்தும் பொழுது அவர் பேசுவதை அமைதியாக காது கொடுத்து கேட்டுப் பாருங்க. ‘அவரின் மீது உங்களுக்கு உள்ள அக்கறையை, அவருக்கு ஆதரவாக நீங்க இருப்பதை’ பேசாத வார்த்தைகளால் உங்களால் பல மடங்குகள் அதிகமாக அவருக்கு உணர வைக்க முடியும்.
எப்பொழுதும் ஏதாவது பேசி கொண்டே இருப்பவருக்கு கிடைக்கும் மதிப்பை விட, ‘சில முக்கிய சரியான தருணங்களில் மட்டும், பேசுபவருக்கு’ அதிகமாக மதிப்பு கிடைக்கும். தேவை அற்ற சமயங்களில், அமைதியாக இருங்க. உங்க மதிப்பு அதிகரிக்கும்.
பிறரின் மீது, உங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற விஷயத்தை அமைதியாக இருப்பதன் மூலமாக வெளிப்படுத்த பாருங்க. பலன்கள் அதிகம்.
பிறரின் சுதந்திரத்தில் தலையிடாமல் அவருடைய பாதையை அவர் விருப்பப்படி அமைத்துக் கொள்ள, நீங்க முழுமையாக அவருக்கு வழி விட, அமைதியாக இருங்க. அமைதி உங்களுக்கும் பிறருக்கும், சுதந்திரத்தை கொடுக்கும்.
இந்த 7 வழிமுறைகள தின வாழ்வில் பயன்படுத்தி பாருங்க. அமைதியின் மூலமாக உங்க வாழ்க்கை பலப்படும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.