உங்களோட பழக்கங்கள் ‘உங்களுக்கானது மட்டும்’ என நீங்க நினைக்க முடியாது. பிறருடன் நீங்க தொடர்பு கொள்ளும் பொழுது உங்களுடைய பழக்கங்களால் பிறரை நீங்க பாதிக்கலாம்.
உங்களை பிறர் விரும்பாமல் போக சொல்லப் போகும் 11 பழக்கங்களில் ஒன்றோ சிலவோ காரணங்களாக இருக்கலாம். அவற்றை பற்றி இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.
நீங்க பழகி வரும் நபரிடம் வரம்பு மீறி அவரின் personal விஷயத்தில் தலையிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? என ஆராந்து பாருங்க. பிறர் உங்களை வெறுக்க காரணமான பழக்கம் இது.
சிலர் பேசும் பொழுது, தேவையான சரியான கேள்விகளை மட்டும் பிறரிடம் கேட்க்காமல் சரியான விஷயத்தை பற்றி மட்டும் பிறரிடம் பேசாமல் அளவுக்கு மீறி தேவையில்லாத கேள்விகளை கேட்பதையும் தேவையில்லாத விஷயங்களை பேசுவதையும் பழக்கமாக வைத்திருப்பாங்க. நீங்களும் இவர்களில் ஒருவரா? என யோசித்துப் பாருங்க. பிறர் வெறுக்கும் பழக்கம் இது.
“உங்களிடம் ஏதேனும் பகிர உங்களுடைய ஆர்வத்தை ஒரு விஷயத்தில் தெரிந்து கொள்ள,” பிறர் விரும்பும் பொழுது அக்கறை கொள்ளும் விதத்தில் எவ்வித ஆர்வத்தையும், எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் நீங்க இருந்தால் பிறருக்கு உங்க மீது வெறுப்பு ஏற்படும். சிரித்த முகத்துடன் ஒருவரை வரவேற்க நீங்க ஆர்வம் காட்டாமல் இருப்பதாக கூட இருக்கலாம். உங்களுடைய இத்தகைய செயல்கள் யாரையாவது வெறுப்படைய வைத்துள்ளதா? என யோசித்துப் பாருங்க.
‘இவரை நம்ப முடியுமா?’ எப்ப எப்படி நடப்பாரோ? என்ற சந்தேகத்தை அடிக்கடி ஏற்படுத்துபவரை பிறருக்கு பிடிக்காது.
அதிக சுயநலத்துடன் நீங்க பிறரிடம் பழகினால் பிறரின் வெறுப்புக்கு ஆளாகுவீங்க.
நேரத்தை கடைப்பிடிக்காத பழக்கம் பிறர் வெறுக்க காரணமான பழக்கம். நேரத்த நீங்க சரியா கடை பிடிக்காத பொழுது பிறரின் நேரத்தை நீங்க பாதிப்புள்ளாக்கறீங்க. இந்த செயல் பிறர் மனதில் உங்களைப் பற்றிய வெறுப்பை ஏற்படுத்தும்.
அதிகப் படியான கடின உழைப்பு மற்றும் எப்பொழுதும் எல்லா விஷயத்திலும் perfect ஆக இருக்கும் பழக்கங்கள் பிறருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் பழக்கங்கள். உண்மையில் அளவுக்கு மீறி அதிக perfect ஆக இருப்பதோ கடின உழைப்போ நடைமுறையில் தேவைப்படாமல் இருக்கும் பொழுது இந்த பழக்கங்களை நீங்க கடை பிடித்து பிறரை கஷ்டப்படுத்தறீங்களா? என யோசித்துப் பாருங்க.
எப்பொழுதும், எந்த விஷயத்திலும் எதிர்மறையாகவே பேசுபவரை எப்பொழுதும் சுயபட்சாதாபத்துடனேயே பேசுபவரை ஒருவர் இல்லாத பொழுது அடுத்தவரை பற்றி புறங்கூறி கொண்டே இருப்பவரை மற்றவர்கள் விரும்ப மாட்டாங்க.
சிலர், பிறர் பேசுவதை சாதாரணமாக கவனிக்காமல், பேசுபவரை பற்றி தேவையில்லாமல் ஆழ்ந்து யூகித்து எப்பொழுதும் எடை போட்டு கொண்டே இருப்பாங்க.
இந்த பழக்கம் பிறர் விரும்பாத பழக்கம்.
பிறர் விரும்பாத பழக்கங்கள் ஒன்றோ இரண்டோ உங்களை அறியாமல் உங்களிடம் இருக்கலாம். யோசித்துப் பார்த்து தேவை எனில் மாற்றிக்கோங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.