‘நன்கு நியாபக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்’ என்ற எண்ணத்தோடு தான் தகவல்களை புத்தகங்களில் படித்ததை மனதில் உள்வாங்கி இருப்பீங்க. ஆனா, மறந்திருக்கும். காரணம் என்னவாக இருக்கும்?
நீங்க படித்த உள் வாங்கிய தகவல்கள் விஷயங்கள் அனைத்துமே மூளையில் பதிந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. நீங்க கவனித்து பார்க்கும் அனைத்து காட்சிகளும், கவனித்து கேட்கும் அனைத்து விஷயங்களும், உங்க மூளையில் எப்பொழுதும் பதிந்து கொண்டு தான் உள்ளது. அதனால் தான், ‘நல்லதையே பார்! நல்லதையே கேள்! நல்லதையே பேசு!’ என பெரியவங்க சொல்றாங்க.
ஒரு class room ல் 30 மாணவர்கள் அமர்ந்து இருக்கறாங்க. அனைவருக்குமே Science Professor, ‘The Human Brain’ என்ற subject பற்றி தெளிவாக விளக்கமாக புரிய வைக்கிறார். அமர்ந்துள்ள students அனைவருக்குமே இந்த subject மிக புதிது. முதல் முறை கேட்கறாங்க.
30 ல், 10 மாணவர்கள் Group A, மற்ற 20 ல் 10 மாணவர்கள் Group B, மீதி இருக்கும் 10 மாணவர்கள் Group C.
Group A students, Professor சொல்வத focus செய்யலை. Group B Students, Professor சொல்வதை நன்கு focus செய்து கவனிக்கறாங்க. அவர்களுக்கு subject புரிகிறது. பொறுப்பாக, notes ம் எடுக்கறாங்க. Group C Students ம், Professor சொல்வதை நன்கு focus செய்து கவனிக்கறாங்க. அவர்களுக்கும் subject புரிகிறது. பொறுப்பாக, notes ம் எடுக்கறாங்க.
A, B, C இவர்களில், Group A students ஆல் தகவல்களை என்றுமே நியாபகத்தில் கொண்டு வர முடியாது. ஏனெனில், இவர்கள் focus செய்யலை. அதனால் மனதில் எந்த தகவல்களும் பதியலை. பதியாத தகவல்களை நியாபகப் படுத்த முடியாது.
மீதமிருப்பது Group B மற்றும் Group C, இவர்கள் நன்கு தகவல்களை கவனித்து உள்வாங்கினார்கள். புரிந்து notes எடுத்தார்கள். இருப்பினும் Group B ஆல் தகவல்களை நியாபகத்திற்கு கொண்டு வர முடியலை.
Group C ஆல் நினைத்த நேரத்தில் தகவல்களை நியாபகத்திற்கு கொண்டு வர முடிந்தது. Group B ஆல் முடியாதது, Group C ஆல் முடிந்தது.என்ன காரணமாக இருக்கும்? என நீங்க யோசித்துப் பாருங்க.
என்னதான் கவனித்தாலும் Group B ஒரு விதத்திலும், Group C வேறு ஒரு விதத்திலும், தகவல்களை மனதில் பதிய வைத்தாங்க. புரிந்து notes எடுத்தாலும் உள்வாங்கிய விதங்கள் வேறு.
நீங்க எந்த விதத்தில் மூளையில் தகவல்களை பதிய வைக்கறீங்க? என்பதை பொறுத்து தான் தேவைப் படும் சந்தர்ப்பங்களில் தகவல்களை எளிதில் நியாபகத்திற்கு கொண்டு வர முடியுமா? முடியாதா? என தெரியவரும்.
‘தகவல்கள் மறந்து விட்டது’ என நீங்க தடுமாறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மூளையில் ஏற்கனவே பதிந்துள்ள தகவல்களை உங்களால் வெளிப்படுத்த முடியவில்லை என்ற புரிதலை கொண்டிருங்க.
மூளை விரும்பும் விதங்களில் தகவல்களை உள் வாங்குங்க. நீண்ட காலம் நியாபகத்தில் இருக்கும்.
தகவல்களை மூளை விரும்பும் விதங்களில் மனதில் உள்வாங்க, 4 steps இருக்கு. இந்த 4 படிநிலைகளையும் நீங்க சரியாக பயன்படுத்தும் பொழுது, நீண்ட காலம் தகவல்களை நியாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும். இந்த 4 படிநிலைகளை இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்து, தின வாழ்வில் செயல் படுத்துங்க.
4 முக்கிய விஷயங்கள் இதோ:
- Step 1: ஆர்வத்துடன் தகவலை அணுகுதல் ( Eagerness )
- Step 2: தகவலில் முழு கவனத்தையும் செலுத்துதல் ( Focus )
- Step 3: தகவலை காட்சிப்படுத்துதல் மற்றும் புரிந்துகொள்ளுதல் ( Visualizing & Understanding )
- Step 4: தகவலை அடிக்கடி காட்சிப்படுத்துதல் ( visualize frequently )
Step 1: ஆர்வத்துடன் தகவலை அணுகுதல் ( Eagerness )
நீங்க cell phone ல் game விளையாடறீங்க, பிடித்த நிகழ்ச்சிகள tv ல் பார்க்கறீங்க, பிடித்த உணவை சாப்பிடறீங்க, சில subjects ஐ பிடித்து படிப்பீங்க. இவை போன்ற, உங்களுக்கு பிடித்த என்ற விஷயங்களாக இருக்கும் பொழுது ஆர்வத்துடன் விஷயத்தை அணுகுவது, கடினமாக இருக்காது. ஆனா, அனைத்து தகவல்களுமே விஷயங்களுமே உங்களுக்கு ஆர்வமாக இருக்கும் என சொல்ல முடியாது.
தேவையின் காரணாமாக படிக்கவோ, தகவல்களை உள்வாங்கவோ அவசியம் ஏற்படலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் நீங்க செய்யவிருக்கும் இந்த செயலினால் ஏற்பட போகும் நல்ல பலன்களை மனதில் ஆர்வத்துடன் இப்பொழுது கிடைத்தது போல கற்பனை செய்துப் பாருங்க. அடிக்கடி பலன்களை ஆர்வத்துடன் கற்பனை செய்துப் பாருங்க.
பலன்களை அனுபவிப்பது போல நீங்க அதிக அளவு உணர்ச்சி பூர்வமாக அடிக்கடி கற்பனை செய்துப் பார்க்க பார்க்க ஆர்வம் மனதினில் அதிகரிக்க ஆரம்பிக்கும். இவ்விதத்தில் பிடிக்காத தகவல்களாக இருந்தாலும், தேவையான நியாபகத்தில் இருக்க வேண்டிய தகவல்களை மனதில் ஆர்வத்துடன் உள்வாங்குங்க.
Step 2: தகவலில் முழு கவனத்தையும் செலுத்துதல் ( Focus )
தகவலை கவனிக்கும் பொழுது கவனக் கூர்மையுடன் ( focus ) கவனியுங்க. எப்பொழுதும் எந்த செயலை நிகழ் காலத்தில் செய்து கொண்டுள்ளீர்களோ? அந்த ஒரு செயலில் மட்டும் focus இருக்குமாறு மனதை பழக்கப் படுத்துங்க.
ஆரம்பத்தில் இந்த பழக்கத்தைப் பழக கடினமானதாக இருக்கலாம். இந்த பழக்கத்தை பழகும் வரை ஏதாவது சின்ன சின்ன பரிசுகளை focus செய்து முடித்தவுடன் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கோங்க. மன ஊக்கத்துடன் கவனக் கூர்மையை விருப்பப் பட்டு அதிகரிக்க முடியும்.
சில சந்தர்ப்பங்களில் உடல் மன ஆற்றல் குறைவு கவனத்தை சிதறடிக்க செய்யும். ஆரோக்கியமான life style ஐ அமைத்துக் கோங்க. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்க. இரவு நல்ல விதத்தில் உறங்குங்க. உடற்பயிற்சிகள், தியானம் இவற்றின் மூலம் புத்துணர்வுடன் இருக்கறப்ப நல்ல விதத்தில் focus செய்ய முடியும்.
Step 3: தகவலை காட்சிப்படுத்துதல் மற்றும் புரிந்துகொள்ளுதல் ( Visualizing & Understanding )
எந்த தகவலையும், புரியாமல் உள்வாங்கும் பொழுது எளிதில் மறந்து விடும்.
தகவல்களை உள்வாங்கும் பொழுது புரியாமல் இருக்குமெனில், புரிந்துக் கொள்ள தேவையான அதிகப் படியான தகவல்களை சேகரிங்க. சேகரித்த தகவல்களை ஏற்கனவே இருக்கும் தகவலுடன் தொடர்பு படுத்தி முழுவதும் மனதில் காட்சிப் படுத்தி ( Visualize ) புரிந்து கொள்ளுங்க.
நீங்க புத்தகத்தில் கண்களுக்கு புலப்படாத தகவல்களை படிக்கும் பொழுது கூட, ஏற்கனவே மனதில் பதிந்துள்ள மற்றொரு தகவலோடு, ஏற்கனவே பழகிய சூழலோடு, இந்த, கண்களுக்கு புலப்படாத தகவல்களை தொடர்பு படுத்தி காட்சிகளாக அவற்றை உருவாகப் படுத்தி படிங்க.
வாழ்வில் நடந்த பழைய நினைவுகளை நினைத்துப் பாருங்க. எந்தெந்த விஷயங்கள் உங்களுக்கு நினைவில் உள்ளது? வாழ்வில் மிக மகிழ்ச்சியாக இருந்த விஷயங்கள்? மிக சோகத்தை ஏற்படுத்திய விஷயங்கள்?
ஆச்சிரியத்தை ஏற்படுத்திய விஷயங்கள்? எத்தனை வருடங்கள் கழித்து கேட்டாலும் இந்த விஷயங்கள் உங்களுக்கு மறக்காது. காரணம் என்ன?
அதிக உணர்வுபுர்வமாக படம் போன்ற காட்சிகளாக நீங்க மனதில் உள்வாங்கிய தருணங்கள் நினைவில், நியாபகத்தில் இருக்கு. இந்த பழைய நிகழ்வு நடந்த சூழலில், என்ன உணர்வு நிலையில் நீங்க இருந்தீர்களோ, அதே பழைய உணர்வு அலை நிலைக்கு, பழைய நினைவுகளை நியாபகத்திற்கு கொண்டு வரும் பொழுது,
நீங்க இயற்கையாகவே செல்வதால் எளிதில் நிகழ்வுகளை உங்களால் நியாபகத்திற்கு கொண்டு வர முடியுது.
ஆக,எந்த தகவலை உள்வாங்கினாலும், புத்தகத்தை படித்தாலும், நல்ல, மகிழ்ச்சியான, ஆர்வமிக்க மனநிலையில், மனதில் உணர்வுபூர்வமாக காட்சிப் படுத்தி படிங்க. இப்படி செய்யும் பொழுது உணர்வுகள் கலந்து தகவல்கள் மனதில் பதியும்.
அதே பழைய உணர்வு நிலையில் காட்சிப் படுத்தினால் எளிதில் தகவல்கள் நியாபகத்திற்கு வரும்.
நீங்க புதியதாக சந்திக்கும் நபர் உங்களிடம் தன் பெயரை சொன்னால் சாதாரணமாக அந்த தகவலை நீங்க உள்வாங்கும் பொழுது அந்த பெயர் சிறிது நாட்கள் கழித்து உங்கள் நினைவிற்கு வருமா? என்பது சந்தேகம்.
ஆனா, அந்த நபர் உங்களிடம் பேசிக் கொண்டிருந்த சூழலை உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தி அவர் தன் பெயரை சொல்வதும், அந்த பெயரை நீங்க மனதில் கற்பனை செய்வதுமாக நினைத்துப் பார்த்து உள்வாங்கினால் அவர் பெயரை எளிதாக நீங்க நியாபகத்திற்கு கொண்டு வருவீங்க.
Step 4: தகவலை அடிக்கடி காட்சிப்படுத்துதல் ( visualize frequently )
அடிக்கடி இந்த காட்சிகளை முடியும் பொழுதெல்லாம் உணர்வுப் பூர்வமாக காட்சிப் படுத்தி பார்க்கும் பொழுது நீண்ட காலம் மனதில் தகவல்கள் நியாபகத்தில் இருக்கும்.
ஆர்வத்துடன் தகவலை அணுகுதல், தகவலில் முழு கவனத்தையும் செலுத்துதல், தகவலை காட்சிப்படுத்துதல் மற்றும் புரிந்து கொள்ளுதல், தகவலை அடிக்கடி காட்சிப் படுத்துதல் இந்த 4 steps யும் தகவல உள் வாங்க நீங்க கடைபிடிக்கும் பொழுது தகவல் நீண்ட காலம் உங்க மனதில் இருக்கும்.
யானைகள் போன்ற விலங்கினதிற்கும், கிளிகள் போன்ற பறவைகளுக்குமே நல்ல நியாபக சக்தி இருக்கும் பொழுது ஆறறிவு கொண்ட மனிதனுக்கு எவ்வளவு நல்ல நியாபக சக்தி இருக்க முடியும்?
திரும்ப திரும்ப ஒன்றை படித்து மனப்பாடம் செய்வதை காட்டிலும், உணர்வுப்பூர்வமாக மனதில் காட்சிப்படுத்தி படிக்கும் பொழுது, நேர விரையம் தவிர்க்கப்படும். விஷயம் நீண்ட காலம் நியாபகத்தில் இருக்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.