தவறு செய்வது மனித இயல்பு. செய்த தவறை மனதார உணர்ந்து மன்னிப்பு கேட்க்கும் குணம் நல்ல குணம்!
குற்றமனப்பான்மை தேவை இல்லாத, நீங்க மன்னிப்பு கேட்க நினைக்க தேவையில்லாத, சில விஷயங்கள் வாழ்வில் உண்டு. எப்படிப்பட்ட விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்க தேவையில்லை? குற்ற உணர்வு தேவை இல்லை என இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.
‘பிறரை எந்த விதத்திலும் பாதிக்காத, நீங்க நீங்களாக இருக்கும் சில விஷயங்கள்’ அடுத்தவர் பார்வையில் தவறாக தெரியலாம். அதற்கான குற்ற மனப்பான்மை உங்களுக்கு தேவை இல்லை. மன்னிப்பு கோர வேண்டிய தேவையும் இல்லை.
சில நபர்களுடன் ஏற்படுத்தும் பழக்கம் உங்களுக்கு கெடுதலை ஏற்படுத்தும் பொழுது அவர்களை விட்டு விலகி இருக்க நீங்க எடுக்கும் முடிவு, பிறர் பார்வையில் தவறாக இருந்தாலும், நீங்க மன்னிப்பு கேட்க தேவையில்லாத விஷயம் இது.
சிலர் கேட்டும் உதவிய, நீங்க செய்ய வேண்டாம் என முடிவெடுப்பது உங்களின் பார்வையில் சரியான உங்களுக்கு ஏற்பட இருக்கும் தீங்கில் இருந்து விடுவித்துக் கொள்ள நீங்க எடுக்கும் முடிவாக இருக்கலாம். இதற்காக, நீங்க வருந்த தேவை இல்லை.
உங்களுடைய கனவு வாழ்க்கையை உங்களுடைய நோக்கத்திற்காக நீங்க வாழ உங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கு. தன் எண்ணப் படி நீங்க வாழலை என பிறர் குறை காணும் பொழுது பிறருக்கு நீங்க அநியாயமாக தீங்கிழைக்காத வரை உங்களுடைய கடமை தவறாத வர அதற்காக நீங்க வருந்தவோ, மன்னிப்பு கேட்கவோ அவசியம் இல்லை.
உங்களுக்காக நீங்க முன்னுரிமை கொடுத்து, நியாயமாக, உங்களுக்காக நீங்க முடிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கும் பொழுது, உங்க முன்னுரிமைய பிறருக்காக விட்டு கொடுத்து, நீங்க மன்னிப்பு கேட்டு, பிறருக்காக வாழனும் என்ற அவசியம் இல்லை.
“குறைபாட்டுடன் இருப்பது, சில விஷயங்கள் தெரியாமல் இருப்பது,” இயல்பு. சூப்பர் ஹீரோவாக யாராலும் இருக்க முடியாது. உங்க குறைபாட்டை நீங்க மேம்படுத்த முயற்சியில் இருக்கும் பொழுது மனதார முயற்சிப்பதே, மிக நல்ல விஷயம். உங்க குறைபாட்டை நினைத்து நீங்க வருந்துவதோ பிறரிடத்தில் மன்னிப்பு கேட்கவோ தேவை இல்ல.
பிறருக்கு உங்க மீதான அதிகப் படியான எதிர்பார்ப்பை நீங்க நிறைவேற்ற முடியாமல் போனதற்கு நீங்க மன்னிப்பு கோர தேவை இல்லை.
உண்மை பிறருக்கு கசப்பை ஏற்படுத்தலாம். உண்மைய பேசியத்திற்காக நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
நீங்க சுய ஒழுக்கத்துடன் ( self discipline ) இருப்பது பிறர் கண்களை உறுத்தலாம். அதற்காக நீங்க வருந்த வேண்டியதில்லை.
தவறான விஷயம் எது? சரியான விஷயம் எது? என்ற தெளிவு உங்களிடம் இருக்கறப்ப, ‘மன்னிப்பு கேட்க தேவையற்ற விஷயங்கள் என்ன?’ என தானாக உங்களுக்கு புரிபடும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.