Confident People, செய்யாத 9 விஷயங்கள்! 9 Things Confident People Don’t Do in Tamil | AsK LIFE Motivation

நம்பிக்கை நபர்கள், செய்யாத 9 விஷயங்கள்! ( 9 Things Confident People Don’t Do ) என்ன என இப்ப பார்க்கலாம்

இரவு படுக்க செல்லும் பொழுது ‘நாளை காலை எழுந்து விடலாம்!’ என்ற நம்பிக்கையுடன் தான் தூங்க செல்வீங்க.

மழைக் காலம் வருவதற்குள் ‘தேவையான உணவை சேகரித்து விடலாம்!’ என்ற நம்பிக்கையில் தான் தக்க காலத்தில் ‘எறும்பு கூட்டம்’ உணவை சேகரிக்கிறது.

இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் வாழ்க்கை வாழ நம்பிக்கை ( self confidence ) தேவை படுகிறது. பிரபஞ்ச இயக்கமே நம்பிக்கையில் தான் அடங்கி உள்ளது.

வாழ்வின் மீது, உங்களின் மீது, எந்த அளவிற்கு உங்களுக்கு நம்பிக்கை உள்ளது?

போராட்டங்கள், சவால்கள் நிறைந்த இந்த வாழ்க்கை பாதையை, நம்பிக்கையின் மூலமாக தான் வெற்றியோடு கடக்க முடியும்.

உங்களுடைய நம்பிக்கையை நீங்க அதிகரிக்க, confident people செய்ய விரும்பாத விஷயங்கள் என்ன? என உங்களுக்கு தெரிந்திருக்கனும். இந்த விஷயங்களை நீங்களும் செய்யாமல் இருக்கனும்.

‘நம்பிக்கையுடைய’ நபர்கள், செய்யாத 9 விஷயங்கள்! என்ன என இப்ப பார்க்கலாம். அவற்றை குறிப்பெடுத்து தின வாழ்வில் நீங்க கடைபிடிங்க.

9 முக்கிய விஷயங்கள் இதோ:

முதலாவது விஷயம்: மகிழ்ச்சிக்காக பிறரை சார்ந்து இல்லாமல் இருத்தல் ( Don’t be Dependent of Others for Happiness )

confident people தங்களுடைய மகிழ்ச்சிக்காக பிறரை சார்ந்து இருக்க மாட்டாங்க. மகிழ்ச்சி ( happy ) என்பது தனிப்பட்ட தன்னை மட்டுமே சார்ந்த விஷயம் என நம்பிக்கை நபர்களுக்கு தெரியும்.

ஒவ்வொரு நாளும் வேலைக்கு சென்றால் தான் சம்பளம் என்று இருந்த கதிருக்கு, ‘வாழ்வில் நம்பிக்கை இருந்தது’. அதனால் அவருக்கு மகிழ்ச்சியும் இருந்தது. ஆனால், மாத சம்பளக்காரரான ரகுவிற்கு, ‘வாழ்வில் நம்பிக்கை இல்லை’. அதனால் அவருக்கு வாழ்வில் மகிழ்ச்சி இல்லை.

இவர் இப்படி இருந்தால் தான் – மகிழ்ச்சி, இந்த விஷயம் இப்படி நடந்தால் தான் – மகிழ்ச்சி என ஒவ்வொரு விஷத்திற்கும், வெளி சூழலை, பிற நபர்களை சார்ந்து நம்பிக்கை வைக்காதீங்க. உங்களுடைய மகிழ்ச்சி பிறரிடம் உள்ளது என நினைக்காதீங்க. உங்களுடைய மகிழ்ச்சி உங்களின் உள் மட்டும் தான் உள்ளது என நம்புங்க.

உங்களின் மீது நீங்க நம்பிக்கை வைத்து உங்களுக்குள் மகிழ்ச்சியை உருவாக்குங்க.

வெளிப் புற சூழல் negative ஆக இருந்தாலும் நீங்க பார்க்கும் கோணத்தை மாற்றுவதன் மூலம் உங்களுடைய மகிழ்ச்சியை உங்களின் உள் இருந்து உருவாக்க முடியும். முயற்சித்துப் பாருங்க.

ஒருவர் உங்களை கோபமோ, அவமானமோ படுத்தும் பொழுது, ‘அவருக்கு அவ்வளவு தான் அறிவு என நீங்க நினைப்பதாக இருக்கலாம்’, பிறர் உங்க கவலைக்கு காரணமாக இருக்கும் பொழுது, ‘இதுவும் கடந்து போகும் என நீங்க நினைப்பதாக இருக்கலாம்’, இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் உங்களின் மகிழ்ச்சியை பிறரிடம் அடகு வைப்பதிற்கு பதிலா உங்களுக்குள் தேடுங்க.

இரண்டாவது விஷயம்: முன்னேற்றத்திற்குரிய செயலை செய்யாமல் இருக்க காரணங்கள் சொல்லாமல் இருத்தல் ( Don’t Say Reasons for Not Doing )

confident people முன்னேற்றத்திற்குரிய செயலை செய்யாமல் இருக்க காரணங்கள் சொல்ல மாட்டாங்க.

தன்னுடைய எண்ணங்களுக்கும், தன்னுடைய செயலுக்கும் தானே பொறுப்பேற்பாங்க.

‘இதனால தான் என்னால் இதை செய்ய முடியாம போனது, அதனால் தான் என்னால அதை என்னால் சிந்திக்க முடியாம பொழுது!’ என ஒன்று நடக்காமல் போக, ‘புற சூழல்’ , தான் முன்னேற்றத்திற்குரிய செயலை செய்யாமல் இருக்க காரணம் என சொல்ல மாட்டாங்க.

பிறர பழி சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என குறுக்கு வழிய தேட மாட்டாங்க.

அதே போல, செய்யாமல் இருக்க என்ன காரணங்கள் என யோசிப்பதை நிறுத்திவிட்டு செய்து விட என்ன காரணங்கள் உள்ளது என யோசிப்பாங்க.

உதாரணமா,
எத்தனை முறைகள் முயற்சிகள் செய்தும் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வில்லை. பிறரால், புற சூழலால் தான் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வில்லை என புலம்பாமல் உங்களால் இருக்க முடியுமா? ‘உங்களுக்கு பிறரை விட திறமைகள் குறைவு’ அதனால் தான் பதவி உயர்வு கிடைக்க வில்லை என குறை பட்டு கொல்லாமல் உங்களால் இருக்க முடியுமா? என்ன மாற்றத்தை ஏற்படுத்தினால் பதவி உயர்வை அடையலாம் என யோசித்து, வேறு, நடக்காமல் போக சிந்தனைகளை தவிர்த்து விட்டு, நடப்பதற்கான செயல்களில் உங்களால் செயல் பட முடியுமா? உங்களால் confident person ஆக இருக்க முடியும்

மூன்றாவது விஷயம்: முக்கியம் என மனதிற்கு பட்டுட்டா ‘கம்பர்ட் ஜோனை’ விட்டு வெளியே வந்து positive ஆக செயலை செய்ய தயங்காமல் இருத்தல் ( Don’t Hesitate To Come Out of The Comfort Zone )

தனக்கு முக்கியம் என மனதிற்கு பட்டுட்டா, ‘கம்பர்ட் ஜோனை’ ( comfort zone )விட்டு வெளியே வந்து முன்னேற்றத்திற்குரிய செயல செய்ய confident people தயங்க மாட்டாங்க.

மாறனுக்கு சம்பளம் குறைவாக இருந்தாலும் இருக்கும் வேலையையே தொடருவது அவருக்கு கம்பர்ட் ஆன விஷயம். இருப்பினும், வாழ்வில் முன்னேறும், எதையாவது positive ஆக சாதிக்கனும் என்ற விருப்பத்தில் தன் கம்பர்ட் ஐ விட்டுக் கொடுத்து சுய தொழில் தொடங்கினார். இது போல, ‘கம்பர்ட் ஜோனை’ விட்டு வெளியே வந்து, முன்னேற்றத்திற்குரிய செயல செய்ய தயங்காதீங்க.

நான்காவது விஷயம்: தன்னை பிறருடன் ஒப்பிட்டு பார்க்கும் செயலை செய்யாமல் இருத்தல் ( Don’t Compare )

confident people தன்னை பிறருடன் ஒப்பிட்டு பார்க்கும் ( don’t compare ) செயலை செய்ய மாட்டாங்க.

கை ரேகை வெவ்வேறாக இருப்பது போல, ஒவ்வொரு உயிருக்கும் தனித்தன்மையிலான வாழ்க்கை நோக்கம் ( life purpose ) உண்டு, அதற்கேட்டாற்போல தான் செயற்பாடுகள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக இருக்கும் என்ற முழு புரிதல் நம்பிக்கை நபர்களுக்கு இருப்பதால், தன்னை பிறருடன் ஒப்பிட்டு பார்க்க மாட்டாங்க.

ரோஜாவும் மல்லிகையும் ஒப்பிடுவதற்காக பிறக்க வில்லை. நம்பிக்கை நபர்கள் போல, நீங்களும் உங்களை பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்காதீங்க.

பிறருடன் ஒப்பிடாமல், உங்களுக்கு என நீங்க உருவாக்கிய தனித்துவமான பாதையில் முழு கவனத்தோடு பயணிக்க என்றும் தயாராக இருங்க.

ஐந்தாவது விஷயம்: வாழ்வின் கசப்பான தருணங்களை ஏற்றுக் கொள்ள தயங்காமல் இருத்தல் ( Accept The Bitter Moments of Life ) 

ஏன் இப்படிப்பட்ட கஷ்டங்கள் எனக்கு மட்டும்? எப்பொழுதும், நினைத்தது போல மட்டுமே அனைத்து விஷயங்களும் எனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என நினைக்காமல் உங்களால் இருக்க முடிகிறதா?

ஏற்ற இறக்கம் கொண்டது தான் வாழ்க்கை என்ற முதிர்ந்த மனநிலையுடன் ( mature person ) உங்களால் இருக்க முடிகிறதா?
confident people இதை செய்வாங்க. வாழ்வின் கசப்பான தருணங்களை ஏற்றுக் கொள்ள தயக்கம் அவர்களிடம் இருக்காது.

மாற்ற முடியாத கசப்பான தருணங்கள் உங்களுடைய வாழ்விலும் இருக்கலாம். நம்பிக்கை நபர் போல, கசப்பான தருணங்களை ஏற்றுக் கொள்ள தயங்காதீங்க.

ஆறாவது விஷயம்: சிறு சிறு தடைகளுக்கெல்லாம் நம்பிக்கை இழக்காமல் இருத்தல் ( Don’t Lose Hope )

சிறு சிறு தடைகளுக்கெல்லாம் நம்பிக்கை நபர்கள் நம்பிக்கை இழக்க மாட்டாங்க.

எத்தனை முறை வலையை கலைத்தாலும் மீண்டும் மீண்டும் வலை பின்னும் சிலந்தியை போல, எத்தனை முறை வீழ்ந்தாலும் எழ ( never give up ) நம்பிக்கை நபர்கள் தயங்க மாட்டாங்க.

எத்தனை முறை வீழ்ந்தாலும், positive ஆக சிலந்தியை போல உங்களால் செயல்பட முடிகிறதா? யோசித்துப் பாருங்க. சிறு சிறு தடைகளை படிக் கற்களாக பார்க்க பழகுங்க.

ஏழாவது விஷயம்: ஒரு நல்ல முன்னேற்றத்திற்குரிய செயலை செய்ய பிறரோட அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்காமல் இருத்தல் ( Don’t Wait for Permission from Others )

நல்ல விஷயம் என தெரியும் பொழுது, முன்னேற்றத்திற்குரிய விஷயம் என தெரியும் பொழுது, ‘பிறர் அனுமதி கொடுத்தால் தான் உங்களால் செய்ய முடியும். பிறருடைய அனுமதியில் தான் உங்களுடைய நம்பிக்கை அடங்கி உள்ளது’ என்ற எண்ணத்தில் செயல் படாமல், உடனே முடிவெடுத்து, முன்னேற்றத்திற்குரிய அந்த விஷயத்தை செய்ய உங்களால் முடியுமா? Confident person நீங்க.

விஷயத்தை பிறரிடம் தெரியப் படுத்தி, அவர் கருத்தை கேட்டு தெரிந்து கொள்வதற்கும், அவர் அனுமதித்தால் தான் செய்வேன் என அனுமதிக்காக எதிர்பார்த்து காத்து இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. இதை புரிந்து, நல்ல, முன்னேற்றத்திற்குரிய விஷயம் என மனதிற்கு பட்டுட்டா தைரியமாக நம்பிக்கையுடன் செயல்படுத்துங்க.

எட்டாவது விஷயம்: ஒருவர் சொல்வதை அப்படியே எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் நம்பாமல் இருத்தல் ( Don’t Believe Without Any Research )

எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் ஒருவர் சொல்வதை அப்படியே confident people நம்ப மாட்டாங்க. தன்னுடைய பகுத்தறிவை பயன்படுத்தி, கேட்ட விஷயம் சரி தானா? என யோசித்துப் பார்ப்பாங்க.

‘கண்களால் பார்ப்பதும் பொய், காதால் கேட்ப்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என கேள்வி பட்டு இருப்பீங்க.

உங்களுடைய கண்களால் பார்த்ததையே, உண்மையில் உங்களால் நம்ப முடியாது? உங்களுடைய காதால் கேட்டதையே நம்ப முடியாது? தீர விசாரித்து முடிவெடுப்பதே சரியாகும். இப்படி இருக்கும் பொழுது, பிறர் சொல்வதை எந்த ஆராய்ச்சியும் இல்லாம ஏற்று கொள்வது சரியானது அல்ல என புரிந்து, confident person போல ஒருவர் சொல்வதை நன்கு ஆராய்ந்து தேவை எனில் ஏற்றுக் கோங்க.சரி இல்லை எனில் ஒதிக்கிடுங்க.

ஒன்பதாவது விஷயம்: தன் கட்டுப் பாட்டில் இல்லாத விஷயங்களை நினைத்து கவலைப் படாமல் இருத்தல் ( Don’t Worry About Things That Are Out Of Your Control )

‘எப்பொழுதும், உங்க கட்டுக்குள் இருப்பதைப் மட்டும் தான் உங்களால் மாற்ற முடியும். உங்க கட்டுக்குள் இல்லாததை நினைத்து கவலைப் பட்டு பிரயோஜனம் இல்லை’, இதனை புரிந்து confident people செயல்படுவாங்க. கட்டுக்குள் உள்ளதை சிறப்பாக செய்து முன்னேற்ற பாதையை நோக்கி பயணியுங்க.

செல்லும் பாதை இருட்டாக இருந்தாலும்,நம்பிக்கை என்ற வெளிச்சம்’ முன்னேற்ற பாதைக்கு வழிகாட்டி.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.

%d bloggers like this: