Intuitive Person, வித்தியாசமாக செய்யும் 5 விஷயங்கள்! 5 Things Highly Intuitive People Do Differently in Tamil | Ask LIFE Motivation

நம் கதையின் நாயகன் அஜய் வாழ்க்கை போக்கில் மிக busy ஆக இருந்தார். ஐம்புலன்களுக்கு உட்பட்ட இந்த உலக வாழ்வில் மூழ்கி செயல்படவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. அதையும் தாண்டி, இந்த இயற்கை என்ன சொல்கிறது? தன்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறது? என கவனிக்க அவருக்கு நேரம் இல்லை.

உள்ளுணர்வை கவனித்து பழகுவதால் அவருக்கு அதிக வாழ்க்கை நன்மைகள் கிடைக்கும் என அவருக்கு தெரியவில்லை.

Intuitive Person, வித்தியாசமாக செய்யும் 5 விஷயங்கள்! ( 5 Things Highly Intuitive People Do Differently ) என்ன என இப்ப பார்க்கலாம்.

பொதுவாக நீங்க பார்ப்பது, கேட்பது, நுகர்வது, தொடுவது, சுவைப்பது அனைத்தும் ஐம்புலன்கள் சார்ந்த விஷயம்.

விலங்கினத்திற்கு கூட இந்த ஐம்புலன்கள் சார்ந்த அறிவு உண்டு.

மனிதர்களாக பிறந்துள்ள நமக்கும் விலக்கினத்திற்கும் உள்ள வேறு பாட்டில் முக்கியமாக உள்ளது ஆறாவதாக உள்ள ஒரு உணர்வு உள்ளுணர்வு ( intuitive thinking ). ஐம்புல உணர்வு செய்யமுடியாத பல விஷயங்களை உள்ளுணர்வு செய்யவல்லது.

இந்த உள்ளுணர்வு மேம்பட்டு இருக்க இருக்க மனிதனால் மேன்மை அடைய முடியும். விலங்கினப் பண்புகளில் இருந்து விடுபட்டு மேன்மை அடைய முடியும்.

சாதாரண மனிதர்களுக்கும் விலங்கினதிற்கும் உள்ள முக்கிய வேறுபாட்டிற்கு ‘உள்ளுணர்வு என்ற ஆறாவது அறிவு’ காரணமாக இருப்பது போல சாதாரண மனிதர்களுக்கும், மகான்கள் யோகிகள் இவர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாட்டிற்கு, மகான்கள் யோகிகளின் உள்ளுணர்வு சிந்தனை (intuitive thinking ) மேம்பட்டு உள்ளது காரணமாக உள்ளது.

மூளைக்கு அருகில் உள்ள pineal gland, intuitive thinking க்கு காரணமாக உள்ளது. தியானத்தில் மேம்பட்டோர் உள்ளுணர்வு சிந்தனை மேம்பட்டோர்.

5 வித்தியாசமான விஷயங்களை intuitive thinking ல் சிறந்து இருப்போரால் செய்ய முடியும். அவற்றை இப்ப பார்க்கலாம்.

5 வித்தியாசமான விஷயங்கள் இதோ:

முதலாவது விஷயம்: பிறரின் எண்ணங்களை, உணர்வுகளை பேசாமலேயே புரிந்து கொள்ளுதல்

உங்களுடைய நண்பர் உங்க அருகில் உள்ளார். அவரிடம் பேசாமல் அவர் மனதில் என்ன நினைக்கிறார் என சரியாக உங்களால் யூகிக்க முடியுமா? intuitive thinking உங்களுக்கு மேம்பட்டு இருக்கும் பொழுது உங்க நண்பரின் எண்ணங்களை உணர்வுகளை உங்களால் பேசாமலேயே முடிந்தவரை புரிந்து கொள்ள முடியும்.

Telepathy மூலமாக பிறரின் எண்ணங்களை அறிந்து கொள்ள முற்படுவதும் உள்ளுணர்வு சிந்தனையால் தான்.

ஒருவர் உங்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே ‘இவர் பொய் சொல்கிறார்’ என எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தாலும் கூட உங்க மனதிற்கு தோன்றும். உள்ளுணர்வால் ஏற்பட்ட சிந்தனை இது.

Intuitive thinking ஐ மேம்படுத்த உங்களுடைய உள்மனம் சொல்வதை அடிக்கடி கவனித்துப் பழகுங்க.

பிறரின் எண்ணங்களை, உணர்வுகளை பேசாமலேயே புரிந்து கொள்ளும் செயலில் intuitive people சாதாரண நபர்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பாங்க.

இரண்டாவது விஷயம்: முடிவுகளை உள்ளுணர்வு சார்ந்து சரியாக எடுத்தல்

உள்ளுணர்வு சார்ந்த முடிவுகளை இவர்களால் எளிதாக எடுக்க முடியும். உங்க நண்பர் ஒருவர் உங்களிடம் தான் மிகவும் கஷ்டத்தில் உள்ளதாகவும் பணம் கொடுத்து உதவுமாறும் கேட்கிறார். அவரின் வெளி தோற்றத்தை அவர் பேசுவதை நீங்க உங்க ஐம்புலன்களை கொண்டு அளவிடறப்ப உங்க நண்பரை பற்றி தெரியாத விஷயங்கள் உள்ளுணர்வு சார்ந்து யோசிக்கும் பொழுது உங்க gut feel மூலமாக உங்களால் உணர முடியும். அதற்கேற்ப உங்களால் முடிவுகளை எடுக்க முடியும்.

என்ன தான் ஆதாரங்கள் சரியானதாக ஐம்புலன்களுக்கு தென்பட்டாலும், gut feeling பல நேரங்களில் சரியாக முடிவெடுக்க காரணமாக இருக்கும். Gut feeling சார்ந்த முடிவுகளை intuitive people எளிதாக எடுப்பாங்க.

மூன்றாவது விஷயம்: தனிமையில் அதிக நேரத்தை செலவிடுதல்

உள்ளுணர்வு சிந்தனையாளர்கள் தன் உள்ளுணர்வை கவனிக்க, மேம்படுத்த, தனிமையில் அதிக நேரத்தை செலவிடுவாங்க. உங்களுக்கு தெரிந்த உள்ளுணர்வு சிந்தனையாளர்களை பற்றி யோசித்துப் பார்த்துங்க. அதிக நேரம் தனிமையில் இருப்பதை பார்த்திருப்பீங்க.

தன்னை புரிந்து கொள்ளவும், தன்னுடைய உள்ளுணர்வு சொல்வதை கவனிக்கவும், உள்ளுணர்வு சார்ந்து புற சூழலை பற்றி யோசிக்கவும் இந்த தனிமை நேரத்தை பயன் படுத்துவாங்க.

நீங்களும், தனிமை நேரத்தை அதிகம் ஏற்படுத்தி உள் மனதை கவனிக்க பயிற்சியெடுங்க.

Negative emotions உங்களை ஆதிக்கம் செய்து இருக்கும் பொழுது உள்ளுணர்வை உங்களால் ஆழ்ந்து கவனிக்க முடியாது. கோபம், கவலை, பொறாமை, வெறுப்பு போன்ற எந்த எதிர்மறை உணர்வுகளும் உங்களை ஆதிக்கம் செய்யாமல் உணர்வுகளை கட்டுப் பாட்டில் வைத்திருங்க. அப்பொழுது தான் உள்ளுணர்வை ஆழ்ந்து சரியாக கவனித்துப் பழக முடியும்.

நான்காவது விஷயம்: எதனுடன் தொடர்பு கொண்டாலும் தன் உள்ளுணர்வை முதலில் கவனித்தல்

எந்த ஒரு விஷயத்தை, மனிதர்களை, சூழ்நிலையை அணுகினாலும் முதலில் தன்னுடைய உள்ளுணர்வு சொல்லுவதை intuitive people கவனிப்பாங்க. ஐம்புலன்கள் சார்ந்த கவனிப்பு உள்ளுணர்வு சிந்தனைக்கு அடுத்ததாக தான் அவர்களுக்கு இருக்கும்.

உதாரணமா,
தன்னுடைய நண்பரை சந்திக்கும் பொழுது தன்னுடைய ஐம் புலன்கள் சார்ந்து அவரை பற்றி யோசிப்பதற்கு பதிலாக தன்னுடைய உள்ளுணர்வு சார்ந்து யோசித்து உள்ளுணர்வு வழி நடத்தும் விதத்தில் சிந்திப்பாங்க.

இவ்விதத்தில் சரியாக சிந்திக்கும் பொழுது சிந்தனை மேம்பட்டு இருக்கும்.

ஐந்தாவது விஷயம்: படைப்பாற்றலில் மேம்பட்டு இருத்தல்

intuitive people படைப்பாற்றலில் மேம்பட்டு இருப்பாங்க.

புதியதாக பல கருத்துக்களை பல கோணங்களில் ஆழ்ந்து சிந்தித்து தன் புதிய படைப்புகளில் பயன் படுத்துவதில் அவர்கள் மேம்பட்டு இருப்பாங்க.

பல கதாசிரியர்கள், இயக்குனர்கள் intuitive people என உங்களுக்கு தெரிந்திருக்கும்.

அடிக்கடி, பல வித விஷயங்களை மனதில் கற்பனை செய்து பார்த்து பழகும் பொழுது உங்களுடைய creative thinking மேம்படும். அதன் மூலமாக படைப்பாற்றல் மேம்படும்.

Intuitive Person பின்பற்றும் இந்த 5 வித்தியாசமாக செய்யும் விஷயங்களை நீங்களும் பின்பற்றி Intuitive thinking ஐ மேம்படுத்துங்க.

உள்ளுணர்வு சிந்தனை மனித சிந்தனையில் மேம்பட்ட சிந்தனை.

ஐம்புலங்களுக்கு உட்பட்ட சிந்தனையில் கிடைக்காத பல நன்மைகள் உள்ளுணர்வு சார்ந்து சிந்திக்கும் பொழுது கிடைக்கும்.

UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.

%d bloggers like this: