‘பாதுகாப்பற்ற உணர்வை’ தவிர்ப்பது எப்படி? How to Deal with Insecurities in Tamil | AsK LIFE Motivation

Deal with Insecurities Tamil Quote

லிண்ட்சே வால்டர் உலக புகழ் பெற்ற ஒரு விளையாட்டு வீரர். அவருக்கு  இரண்டு வயதாக இருந்த பொழுது, அவரை அரிய ஆட்டோ இம்யூன் நோய்(அலோபீசியா) தாக்கியது. கிட்டத்தட்ட 2% மக்களை இந்த நோய் உலகளவில் தாக்கி கொண்டு உள்ளது. இந்த நோய் தாக்கப் பட்டவருக்கு  மொத்த உடல் முடி உதிர்வு ஏற்படும். இதன் காரணமாக லிண்ட்சே வால்டர் தன் தலைமுடியை இரண்டு வயதிலேயே கொத்து கொத்தாக இழக்க ஆரம்பித்தார். சில வாரங்களுக்குள், அவருடைய முடி அனைத்தையும் அவர் இழந்து விட்டார். முடி இல்லாததால், அவருக்கு வாழ்க்கை மிக கொடுமையாக இருந்தது. Wig அணிந்து கொண்டார். மிக குறைவான கண் இமைகளும், புருவங்களும் இருந்ததால்,  பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டது. வெட்கப்பட்டார். 

இது அவருக்கு வேதனையாக இருந்தபோதிலும், உடல் வலிமையையும் சுறுசுறுப்பையும் அவர் வளர்த்துக் கொண்டார். கூடைப்பந்தாட்டத்தின் மீதான தனது ஆர்வத்தைக் கண்டுபிடித்தார். அவர் தன் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, விளையாட்டின் மூலம் தனது உள் வலிக்கு மாற்று வழி கண்டுபிடித்தார். அவர் அதிகமாக ஓட ஓட, வலுவான மற்றும் நம்பிக்கையான வால்டரை அவருக்குள் உணர்ந்தார். இது அவருடைய, உலகை நோக்கிய அணுகுமுறையையும் சிந்தனை செயல்முறையையும் முற்றிலும் மாற்றியது. 

“நான் பள்ளியில் கடுமையாக உழைப்பேன். என் ஓடுபாதையில் மணிக்கணக்கில் சுற்றுவேன். எல்லோரையும் போல நானும் இருப்பதாக நடிப்பேன். எனக்கு அலோபீசியா இல்லை என்பது போல நடிப்பேன். நான் தனிமையை உணர்ந்தேன். கூடைப்பந்து உண்மையில் எனக்கு ஒரு வடிகாலாக  மாறியது மற்றும் இந்த விளையாட்டு எனது அலோபீசியா நோயை  சமாளிக்க உதவியது. என்னை ஒரு நேர்மறையான வழியில் திசைதிருப்ப எனக்கு உதவியது. உண்மையில் எனக்கு என்ன தேவை? என்று எனக்கு உணர்த்திய, மிகப் பெரிய பரிசு, அலோபீசியா. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்!” என்று அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பற்ற உணர்வு அனைவர் வாழ்விலும் ஏதோ ஒரு கால கட்டத்தில் இருக்கும். வாழ்க்கை முழுவதுமே, பாதுகாப்பற்றதாகவும் தோணலாம். அதன் மீது ஏறி எப்படி பயணிப்பது என்ற யுக்தியை கண்டு பிடித்தால், சாதனை படைக்கலாம்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.