உங்களுக்கு நீங்களே கொடுக்கும் 6 அவமானங்கள்! 6 Ways You Unknowingly Insult Yourself in Tamil | AsK LIFE Motivation

Ways You Unknowingly Insult Yourself Tamil Quote

எப்படிபட்ட வீரர்களையும் அசாதாரணமாக வீழ்த்தும் சக்தி கொண்ட ஒரு புகழ்மிக்க போர்வீரர், தன் வயதான காலத்தில், இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதில் தன் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்தார்.

இவரின் புகழை கேள்விப்பட்ட, ஒரு இளம் அசுர குணம் கொண்ட, பல வெற்றிகளை பார்த்த போர் வீரர், இந்த வயதான மனிதரை வம்புக்கிழுக்க என்றே போட்டிக்கு அழைத்தார். தன் மாணவர்கள் ‘வேண்டாம்’ என கேட்டுக்கொண்டும் இந்த இளம் வீரனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக, அந்த முதியவர் போட்டிக்கு ஒத்துக் கொண்டார்.

அந்த இளம் வீரனின் யுக்தி, போட்டிக்கு வருபவரை முதலில் களத்தில் செயல்பட வைத்து, போட்டியாளரின் பலவீனத்தை கண்டு பிடித்து, அந்த பலவீனத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவது.

அதே யுத்தியை இந்த முதியவரிடமும் பயன்படுத்த நினைத்து, அவரை களத்தில் இறங்கி செயல்பட வைக்க,   பல விதங்களில் இந்த இளம் வீரன் முயற்சிகள் செய்தார். ஆனால் அந்த முதியவர் இடத்தை விட்டு நகர வில்லை. உலகத்தில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி, அந்த முதியவரின் முகத்தில் காரி துப்பினார் அந்த வீரர். அதற்கும் அந்த முதியவர் அசர வில்லை.

தன்னை தானே அசிங்கப் படுத்தி, தனக்கு தானே அவமானத்தை கொடுத்து, போரிட ஆற்றல் இல்லாமல், இறுதியில் வேறு வழி இன்றி, போட்டியை விட்டு வெளியேறினார் அந்த இளம் வீரர்.

‘தனக்கு பிறரால் கொடுக்கப்படும் சன்மானம் எதுவாக இருந்தாலும், தன்னால் ஏற்றுக் கொள்ளப் பாடாத பொழுது, கொடுத்தவரையே இந்த சன்மானம் சென்றடையும்’ என இந்த முதிய வீரர் நன்கு தெரிந்திருந்தார்.

என்ன செய்கிறோம் என்ற விழிப்பு இல்லாமல் செயல்படும் பொழுது, தனக்கு தானே அவமானதை கொடுக்கிறோம் என்ற புரிதல் இல்லாமல் போய்விடுகிறது.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.