அதிக உணர்ச்சிவயப் படும் நபராக நீங்க இருக்கும் பொழுது அடிக்கடி உங்க உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் பாதிப்புக்குள்ளாகும். அதிக உணர்ச்சிவயப் படுவதை நிறுத்த சில வழிமுறைகள் இருக்கு.
ஒரே சமயத்தில் பல திட்டமிடாத பணிகளை செய்யும் விதமான எதிர்பாராத சூழ்நிலைகளை ஏற்படுத்தாமல்
‘முன்கூட்டிய திட்டமிட்ட, தினசரி காரியங்கள்,’ என்ற வாழ்க்கை முறைகளை பின்பற்றுங்க.
அடிக்கடி உணர்ச்சிவயப் படும் சூழ்நிலைகள் ஏற்படாதவாறு வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்துக்கோங்க.
எந்த விஷயங்கள் உங்களுடைய உணர்ச்சிகளை தூண்ட கூடியது என்ற முழு புரிதலோடு இருங்க. இந்த விஷயங்களை தவிர்க்க முடியுமா? தவிர்க்க முடியாது எனில் எப்படி அணுக என்ற முன்கூட்டிய திட்டத்தை மனதளவில் ஏற்படுத்துங்க.
எதிர்பாராத விஷயங்களும், வாழ்வில் ஏற்படலாம். உணர்ச்சிவயப் பட்ட மனநிலையில் இந்த விஷயங்களை நீங்க அணுகும் பொழுது தவறாக வாழ்க்கை முடிவுகள் ஏற்படும்.
ஒரு விஷயம் ‘உங்க உணர்ச்சிகளை பாதிக்க போகிறது’ என தெரிய வரும் அந்த கணமே அந்த விஷயத்தை நீங்க உங்க மனதளவில் உள்வாங்காமல் மனதில் ஒரு தடை ஏற்படுத்தி சிறிது கால அவகாசம் எடுத்துக்கோங்க. விஷயத்தை அணுக சிறிது நேர அவகாசம் எடுக்கும் பொழுது உங்க உணர்ச்சிகள் இந்த இடைப்பட்ட நேரத்தில் கட்டுப்படும். இந்த இடைப்பட்ட நேரத்தில் மனதிற்கு புத்துணர்வு கொடுக்கும் விஷயங்களில் மனதை திசை திருப்புங்க.
உணர்ச்சிகள் கட்டுப்பட்டவுடன் விஷயத்தை நீங்க யோசிக்கும் பொழுது விஷயத்தின் உண்மை தன்மை மனதிற்கு சரியாக புரிய வரும்.
பின், ‘எந்த விதத்தில் விஷயத்தை அணுக?’ என சரியான விதத்தில் யோசிக்க ஆரம்பிப்பீங்க. இந்த வழிமுறைகள பின்பற்றி பாருங்க. ‘உணர்ச்சிகளை கையாள தெரியும் பொழுது, பல விரும்ப தகாத வாழ்க்கை நிகழ்வுகளை தவிர்த்து விடலாம்.’
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.