ஆசிரியர் தன் மாணவர்களை பார்த்து, “நான் கைகளில் பிடித்துள்ள, இந்த குவளை தண்ணீரின் எடை என்னவாக இருக்கும்?” என கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கூறினர்.
அதற்கு ஆசிரியர், “இதன் எடை என்னவாக இருந்தாலும் பிரச்சனை கிடையாது. இதனை எவ்வளவு நேரம் கையில் பிடித்துள்ளேன்?” என்பதே இங்கு முக்கியம்.
ஒரு நிமிட நேரம் பிடித்திருந்தால் எதுவும் தெரிய போவதில்லை. ஆனால், ஒரு மணி நேரம் என்றால், கை வலிக்கும். ஒரு நாள் முழுவதும் என்றால், கை முடங்கி விடும்.
இதே போல தான், மன அழுத்தம்.
மன அழுத்தத்திற்கு காரணமானவற்றை சில நிமிடங்கள் நினைத்தீர்கள் என்றால், பிரச்சனை இல்லை.
சில மணி நேரங்கள் நினைத்தீர்கள் என்றால், உங்களுக்கு கஷ்டமாக இருக்கும்.
சில நாட்கள் நினைத்தீர்கள் என்றால், வாழ்க்கை முடங்கி விடும்.” என்றார்.
மன கஷ்டங்களை கடந்து வாழ பழக வேண்டும். இரவும் பகலும் தலையில் சுமந்து வாழக் கூடாது.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.