தன் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஆசைப் பட்ட ஒரு நபர், ஒரு துறவியை பார்க்க சென்றார். துறவி அவரிடம் பேச ஆரம்பிக்கும் பொழுது, அந்த நபர் கேள்விகளை எழுப்பினார் மற்றும் தனது நம்பிக்கைகளை, சொந்த கருத்துகளை அடிக்கடி வெளிப்படுத்தினார்.
இறுதியில் துறவி பேசுவதை நிறுத்திவிட்டு அந்த நபருக்கு தேநீர் பரிமாறினார். அந்த நபரின் கோப்பையில் தேநீர் நிரம்பி இருந்தும், துறவி தேநீரை ஊற்றிக் கொண்டே இருந்தார்.
‘நிறுத்துங்கள்! கோப்பை நிரம்பியிருப்பதை நீங்கள் காணவில்லையா? நிரம்பி உள்ள கோப்பையில் எப்படி தேநீரை நிரப்ப இயலும்?’ என அந்த நபர் கூறினார்.
அதற்கு அந்த துறவி, ‘இந்த கோப்பையைப் போலவே, நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களால் நிறைந்திருக்கிறீர்கள்.நீங்கள் அதை முதலில் காலி செய்யாவிட்டால், எப்படி புது கருத்துகளை உங்களால் கிரகிக்க இயலும்.வாழ்வில் எப்படி மாற்றங்களை ஏற்படுத்த இயலும்?’ என பதிலளித்தார்.
வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த மனதில் உள்ள எண்ணங்களில் முதலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.