மறதியை தவிர்ப்பது எப்படி? How to Stop Being Absent-Minded in Tamil | AsK LIFE Motivation

Absent Minded Tamil Quote

ஐசக் நியூட்டன், கேம்பிரிட்ஜில் உள்ள தனது கல்லூரியில் வசித்து வந்த பொழுது, ​​இரவு உணவிற்காக செல்லும் வழியில், தன் பாதையை அடிக்கடி மறந்து விடுவார். உணவருந்த செல்வதற்கு பதிலாக, தன் கால் தடத்தை கண்டுபிடித்து தன் அறைக்கே திரும்ப மறதியில் வந்துவிடுவார். 

அதேபோல, தன் நண்பர்களுக்காக, மது பாட்டிலை எடுக்க தன் அறைக்கு சென்றால், எதற்காக அறைக்கு வந்தோம்? என்ற நினைவு, துளி கூட இல்லாமல், தன் அறையிலேயே பணி செய்ய தங்கி விடுவார்.  

நியூட்டன், தன் தலைமுடியை சீர் செய்வது கூட, அரிதான விஷயமாக தான் இருந்தது. அவ்வப்போது அரைகுறை ஆடையுடன் வீட்டை விட்டு வெளியில் கிளம்பி வந்து விடுவார். நியூட்டனை போல, பல மேதைகளும், மறதியில் தன் வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். 

மறதி என்பது கவன சிதறல். வேறொன்றின் மீது கவனம் வைத்து, சிலவற்றை மறந்து விடுவது. சில வாழ்வியல் மாற்றங்களை செய்யும் பொழுது, மறதியை தவிர்த்து விடலாம்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.