ஒரு குளத்தில் மூன்று கொக்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.
முதல் கொக்கு, ‘என் அலகு மிக அற்புதமானது. வேறு எந்த பறவைக்கும் என்னுடையதை போன்ற அபிரிதமான அலகு இல்லை. ஆகையால், குளக் கரையில் சென்று நிற்கப் போகிறேன். என் அழகிய அலகை பார்த்து, மற்ற பறவைகள் அனைத்தும் பொறாமைப்படும்.’ என நினைத்தது.
இரண்டாவது கொக்கு, ‘நான் என் அலகை நேசிக்கிறேன். அதனை பாதுகாக்க வேண்டும். என் அலகை சேதப்படுத்த என்னால் முடியாது. எனவே, ஆழமற்ற நீரில் சிறிய சிறிய மீன்களை மட்டுமே பிடிக்கப் போகிறேன். என்னால் அதிகம் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அது மிகவும் ஆபத்தானது.’ என நினைத்தது.
மூன்றாவது கொக்கோ, ‘நான் என் அலகை நேசிக்கிறேன். இது எனக்கு அற்புதமானது. நான் வரம்புகளைத் தாண்டி, என் அலகைப் பயன்படுத்தப் போகிறேன். நான் இந்த குளத்தில் சிறந்த மீன் பிடிப்பவனாக மாறப்போகிறேன். ஏதோ ஒரு காரணத்திற்காக தான், எனக்கு இந்த அலகு வழங்கப்பட்டுள்ளது. எனவே நான் கடினமாக உழைத்து அங்குள்ள மிகப்பெரிய மீன்களைப் பிடிக்கப் போகிறேன்.’ என நினைத்தது.
நம் அனைவருக்குமே தனித்துவமான எல்லைகள் அற்ற திறமைகள் உள்ளன. ஆனால், நம் திறமைகளை நாம் எப்படி பார்க்கிறோம்? என்பதில் நம் வாழ்வின் வெற்றி அமைந்துள்ளது.
உங்களுடைய திறமைகள் எல்லைகள் அற்றது என்ற முழு நம்பிக்கை கொள்ளுங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.
Very nice story and motivating
Thank you Very much
Regards
Krish
You are welcome, Krish.:)