Be Smart Motivational Quote Tamil

தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு ஒரு மனிதர் விற்றார். அடுத்த நாள் அந்த விவசாயி கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க சென்ற பொழுது, ​​அதிலிருந்து தண்ணீரை எடுக்க அந்த மனிதர் அனுமதிக்கவில்லை. 

‘நான் உங்களுக்கு விற்றது. கிணற்றை தான். தண்ணீரை அல்ல. நீங்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க முடியாது.’ என அந்த மனிதர் விவசாயியை பார்த்து சொன்னார்.

விவசாயி மிகவும் மனம் வருந்தினார். பேரரசரின் நீதிமன்றத்திற்கு சென்றார். அனைத்தையும் பேரரசரிடம் விவரித்து, விவசாயி நீதி கேட்டார்.

இந்த வழக்கை யார் விசாரிக்க முன்வர தயாராக உள்ளீர்கள்? என  பேரரசர் நீதிமன்றத்தில் வினவிய பொழுது , பீர்பால் முன்வந்தார். ஆகையால் இந்த வழக்கை பீர்பாலிடம் பேரரசர் ஒப்படைத்தார். கிணற்றை விவசாயிக்கு விற்ற நபரை பீர்பால் அழைத்தார். ‘கிணற்றின் தண்ணீரை ஏன் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. கிணற்றை விவசாயிக்கு விற்றுவிட்டீர்கள் அல்லவா? ‘ என பீர்பால் கேட்டார்.

அதற்கு அந்த நபர், ‘பிர்பால்! நான் கிணற்றை மட்டும் தான் விவசாயிக்கு விற்றேன், தண்ணீர் அல்ல. கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க அவருக்கு உரிமை இல்லை.’ என்றார்.

பீர்பால் புன்னகையுடன் அந்த நபரிடம், ‘நல்லது. ஆனால் பாருங்கள். நீங்கள் இந்த விவசாயிக்கு கிணற்றை மட்டும் விற்றீர்கள். தண்ணீர் உங்களுடையது என நீங்கள் கூறுகிறீர்கள் என்பதால், உங்கள் தண்ணீரை விவசாயியின் கிணற்றில் வைக்க உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் தண்ணீரை அவரது கிணற்றில் வைத்திருக்க விவசாயிக்கு நீங்கள் வாடகை செலுத்த வேண்டும் அல்லது தண்ணீரை உடனடியாக அவருடைய கிணற்றிலிருந்து வெளியே எடுங்கள்.’ என்றார்.

பீர்பாலின் அதிபுத்திசாலிதனத்தால் அந்த மனிதரின் தந்திரம் தோல்வியடைந்தது. 

அதிபுத்திசாலிகள், பிறர் ஏற்க தயங்கும் வாய்ப்புகளை தயங்காமல் ஏற்பர். 


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.