வாழ்க்கையில் முன்னேறுபவர் புத்திசாலி! என்ன செய்தால் வாழ்வில் நிரந்தர முன்னேற்றம் கிடைக்கும் என புத்திசாலிக்கு தெரியும்.
வாழ்க்கையை பற்றிய ஆர்வத்த அதிகரிக்கும் பொழுது, சுயக் கட்டுப்பாட்டுடன் ( self discipline ) செயல்படும் பொழுது, ஆக்கப் பூர்வமான சிந்தனையை ( creative thinking )மேம்படுத்தும் பொழுது, உங்களை நீங்கள் நல்ல விதத்தில் உணர முயற்சிக்கும் பொழுது, உங்க புத்திசாலி தனத்தை நல்ல விதத்தில் உங்களால் உணர முடியும்.
புத்திசாலித்தனத்துடன் செயல்பட 6 வழிமுறைகள் இருக்கு. அவற்றை இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.
- ‘நான் புடிச்ச முயலுக்கு மூன்று கால்கள்!’ தான் என, செயலை செய்யாமல் இருக்க விவாதித்துக் கொண்டிருக்காமல், பிரபஞ்ச நியதிகளுக்கு உட்பட்டு, திறந்த மனநிலையுடன், சூழ்நிலைக்கு ஏற்றார் போல வளைந்து கொடுத்து திறம்பிட செயல்படுங்க.
- பிறரின் அறிவுநிலை எந்த அளவு உள்ளது? என சரியாக கணித்து, பிறரின் அறிவுநிலை ஏற்றத் தாழ்வுகளை புரிந்து, அவரிடம் எப்படி தொடர்பு கொண்டால்? சரியாக இருக்கும் என யோசித்து, முதிர்ந்த மனநிலையுடன் ஒருவரிடம் செயல்படுங்க.
- வாழ்க்கை நோக்கத்தை புரிந்து, வாழ்வை மேம்படுத்த ஆர்வத்துடன் உங்களை நீங்கள் ‘நித்தம் புதுப்பித்து’ தின வாழ்க்கை வாழுங்க.
- பேசி கொண்டே இருப்பதை வித, செயல்படுவது புத்திசாலி தனம் என புரிந்து, பேசுவதை குறைத்து அதிகம் செயல்படுங்க.
- உங்களை விட புத்திசாலித்தனம் மிகுந்தவருடன் தொடர்பில் இருக்க விரும்புங்க.
- உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்க செயல்படுங்க.
இந்த 6 வழிமுறைகளையும் தின வாழ்வில் நீங்க செயல்படுத்துவதன் மூலம் புத்திசாலித்தனத்தை மேம்படுத்தலாம்.
வாழ்வில் முன்னேற தன்னுடைய அறிவை மாற்றி அமைக்கும் விருப்பம் புத்திசாலிக்கு இருக்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.