உங்களை நீங்க இப்ப எப்படி பார்க்கறீங்க? பிறர் உங்களை இப்ப எப்படி பார்க்கிறார்? எதிர்காலத்தில் உங்களை நீங்க எப்படி பார்க்க விரும்பறீங்க? இவை மூன்றுக்கான பதில்களை யோசித்து எழுதுங்க.
எதிர்காலத்தில் உங்களை நீங்க பார்க்க விரும்புவது போல, ‘பிறர் எப்படி உங்களை பார்க்க வேண்டும்?’, என நீங்க விரும்புவது போல உங்களை நீங்க இப்ப பார்க்க பழகுங்க.
இப்படி நீங்க பார்க்கும் பொழுது அதுவாகவே ‘எண்ணத்தால் உணர்ச்சியால்’ மாற ஆரம்பிப்பீங்க.
ஒன்றை அடையும் திறமைகள் இருக்கும் பொழுது, இந்த நிமிடம் அடைந்து இல்லாத காரணத்தினாலேயே நீங்க அந்த ஒன்றை அடையும் வர வேறு நபராக, ‘உங்களுக்கு நீங்களே’ விருப்ப படாத நபராக, ‘உங்களை நீங்க இப்பொழுது பார்க்கனும்’ என்ற அவசியம் இல்லை.
எதிர்காலத்தில் ஒரு நல்ல தொழில் அதிபராக மாற உங்களுக்கு விருப்பம் இருந்தால் தொழில் அதிபரான பின்பு உங்களுடைய குணநலன்கள் எப்படி இருக்குமோ? உங்களுடைய நடை முறை பழக்கங்கள் எப்படி இருக்குமோ? அதேபோல உணர்ச்சியால் எண்ணத்தால் இப்பொழுது நீங்க இருப்பது போல உருவாகப்படுத்துங்க.
நீங்க உருவகப்படுத்தும் எண்ணத்திற்கு தக்க சூழ்நிலையை உருவாக்க முற்படுங்க. உங்க விருப்பத்திற்கு தக்க தானாக உருவாகிய சூழ்நிலைக்கு உயிரோட்டம் கொடுங்க. இந்த செயல்பாடுகள், நீங்க நினைத்தது போல நீங்க விரும்பிய நபராக எதிர்காலத்தில் நீங்க உருவெடுக்க காரணமாக அமையும். நீங்க விரும்பிய நபராக மாற ஆரம்பிப்பீங்க. மாறிடுவீங்க.
உங்களை நீங்க பார்த்த விதம், பார்க்கும் விதமே உங்களுடைய இப்போதைய நிலைமைக்கு காரணம்.
இந்த நிலைமை உயர உங்களை பற்றிய உங்களின் பார்வை, செயல்பாடுகள் எப்பொழுது உயரியதாக இருக்கனும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.