ரகுவும் சங்கரும் நண்பர்கள். இருவரும் பட்டப்படிப்பு முடிந்துவிட்டு ஒரு பெரிய விற்பனை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். இருவருமே நிறுவனத்தில் மிக கடினமாக உழைத்தனர்.
மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. நிறுவனத்தின் இயக்குனர், ரகுவிற்கு பதவி உயர்வு கொடுத்தார். ரகு விற்பனை நிர்வாகி ஆனார். சங்கர் எந்த பதவி உயர்வையும் பெறவில்லை, அதே பணியை தொடர்ந்தார்.
இயக்குனர் செய்தது நியாயமற்றது என சங்கர் முடிவு செய்தார். எனவே அவர் தனது முதலாளியிடம் சென்று,’ ஒரு கடின உழைப்பாளி ஊழியரை நீங்கள் சரியாக பாராட்டவில்லை’ என்றார். சங்கர் கடினமாக உழைபவர் என முதலாளிக்குத் தெரியும். ரகுவிற்கும் சங்கருக்கும் இடையிலான வேறுபாட்டை காண்பிப்பதற்காக, முதலாளி சங்கரிடம், ‘மாம்பழங்கள் விற்பனை செய்யும் எவரையேனும் சந்தையில் கண்டுபிடிங்கள்’ என்றார் . சங்கர் திரும்பியதும், முதலாளி, ஒரு கிலோ மாம்பழங்கள் என்ன விலை?’ என கேட்டார். எனவே சங்கர் மீண்டும் சந்தைக்குச் சென்று பின்னர் விலை சொல்லத் திரும்பினார் – ஒரு கிலோவுக்கு 250 ரூபாய் என்றார்.
பின்னர் முதலாளி ரகுவிடம் அதையே கேட்டார். ரகு சந்தைக்குச் சென்றார், அவர் திரும்பி வந்ததும், ‘தற்போது ஒரு நபர் மாம்பழங்களை விற்கிறார், ஒரு கிலோவுக்கு 250 ரூபாய், 10 கிலோவுக்கு 2000 ரூபாய், இப்போது அவரிடம் 300 கிலோ மாம்பழங்கள் உள்ளன. மேஜையில் 30 தர்பூசணிகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் சுமார் 4 கிலோ எடையுள்ளவை. இரண்டு நாட்களுக்கு முன்பு தெற்கிலிருந்து மாம்பழங்கள் வாங்கப்பட்டன, அவை புதியவை, நல்ல தரம் வாய்ந்தவை’ என கூறினார்.
தனக்கும் ரகுவிற்கும் உள்ள வித்தியாசத்தால் சங்கர் ஈர்க்கப்பட்டார். சங்கர் தனது நண்பரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார்.
சாதாரண மனிதர்கள் ‘நாளை என்ன தேவை?’ என்பதை மட்டும் பார்ப்பவர்கள். வெற்றி மனிதர்கள் ‘நீண்ட கால தேவை என்ன?’ என பார்ப்பவர்கள்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.