நீங்க பிறந்ததில் இருந்து இதுவரை இந்த சமுதாயம் உங்களுக்கு கொடுத்துள்ளது பல. இயற்கை கொடுத்துள்ளது பல. நீங்க பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கும் இந்த விஷயங்களுக்கு நீங்க நன்றியுணர்வுடன் இருக்கும் பொழுது மேலும் அதிகமாக பெறும் தகுதி உங்களுக்கு அதிகரிக்கும்.
நீங்க, உங்க வீட்டின் பின்புறம் ஒரு கொய்யா மரம் வளர்ந்திருப்பதை பார்க்கறீங்க. மரத்தில் நிறைய பழங்கள் உள்ளன. ஆசையாக பழங்களை பறித்து சாப்பிடறீங்க. மரம் உங்களுக்கு பழங்கள் கொடுத்துள்ளது.
நீங்க பெற்ற இந்த பலனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ‘மரத்திற்கு நீங்க நீர் ஊற்றினால்’ உங்களால் மரத்திடமிருந்து பழங்களை தொடர்ந்து பெற முடியும். மேலும், அதிக பழங்களும் கிடைக்கும்.
உங்களுக்கு எது கிடைக்கவில்லை? என்பதில் மனதை செலுத்தாமல் எது கிடைத்துள்ளது? என்பதில் மனதை செலுத்தி நன்றியுணர்வுடன் இருந்து பாருங்க. இதனால், உங்க மூளையில் சில வேதியியல் மாற்றங்கள் ஏற்படும். வாழ்வில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உறவுகளை மேம்படுத்த முடியும். உறவுகள் மேம்படும் பொழுது அதிக நேர்மறை ஆற்றலும் உங்களுக்கு கிடைக்கும்.
மனதளவில் ஏற்படும் இந்த நேர்மறை மாற்றங்களால் உடல் நலத்தையும் உங்களால் மேம்படுத்த முடியும்.
நன்றியுணர்வை அதிகம் காட்டும் தொழிலாளி உங்களிடம் வேலை செய்தால் ‘அதிகம் அவருக்கு உதவ வேண்டும்’ என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படாதா?
நீங்க செய்யும் வேலைக்கு ‘அதிக நன்றி செலுத்தும்’ முதலாளிக்கு அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படாதா?
நீங்க ஒருவருக்கு உங்க நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணித்து ஒரு உதவி செய்யும் பொழுது உங்க உதவியை பெற்றவர் ‘பொருட்படுத்தாம, உங்களை அலட்சியம் செய்தால்?’ மறுமுறை அவருக்கு உதவ உங்களுக்கு தோன்றுமா? யோசித்துப் பாருங்க.
தவறான எதிர்மறை உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படுவதை நன்றியுணர்வு தடுக்கும்.
வாழ்த்துக்களை மனதார வாய் வார்த்தைகளில் தெரிவித்தல், எழுத்தின் மூலம் தெரிவித்தல், மனதில் வாழ்த்துதல், பிராத்தனையில் நன்றி தெரிவித்தல் இது போன்ற வழிமுறைகளில் நன்றியுணர்வை காட்டலாம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.