ஒரு மனிதர் பொதி சுமக்கும் கழுத்தை ஒன்றை, காட்டுப் பாதையில் அழைத்துச் சென்றார். போகும் வழியில் கழுதை தெரியாமல் ஆழமான பள்ளத்தில் விழுந்து விட்டது. எத்தனை முறை முயற்சி செய்தும் கழுதையை பள்ளத்தில் இருந்து வெளியே எடுக்க அவரால் முடியவில்லை. அதனால் அவர் கழுதையை உயிரோடு புதைக்க முடிவு செய்தார்.
மேலே இருந்து கழுதையின் மீது மண்ணை கொட்டினார். கழுதை சுமையை உணர்ந்தது. உடலை அசைத்து தன் மீது கொட்டப் பட்ட மண்ணையே அதன் படியாக கழுதை பயன்படுத்த தொடங்கியது. எவ்வளவு மண் கொட்டப் பட்டதோ அந்த அளவு கழுதை உயர்ந்தது.
நண்பகலுக்குள் கழுதை, மேய்ச்சல் நிலங்களில் மேய ஆரம்பித்தது. இதனை கண்ட அந்த மனிதர் ஆச்சிரியத்தில் ஆழ்ந்து போனார்.
கழுதை அதனால் முடிந்த சிறந்த செயலை செய்தது.
உங்களால் முடிந்த சிறந்த செயலை தினம் நீங்க செய்யும் பொழுது, அந்த செயல்களின் தொகுப்பே, மிகப் பெரிய வெற்றியை உங்களுக்கு கொடுக்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.