வாழ்க்கையை சிறப்புடையதாக்குவது எப்படி? Power of Challenge in Tamil | AsK LIFE Motivation

Better Life Tamil Quote

அறிவுமிக்க தந்தை தன் இரட்டை மகன்களுக்கு, ‘வாழ்வை எப்படி வாழ வேண்டும்?’ என புரியவைக்க ஆசை பட்டார். அதனால், இருவரையும் அழைத்து, ஒரு காட்டு பாதைக்கு அழைத்துச் சென்றார்.

 ‘இப்பொழுது உங்களுக்கு இன்று ஒரு தேர்வும், நாளை ஒரு தேர்வும் வைக்கப் போகிறேன். யார் வெற்றி பெறுகிறீர்கள்? என பார்க்கலாம்’ என்றார்.

முதல் தேர்வாக, அந்த காட்டுப் பாதையை கடந்து இறுதியில் இருக்கும் ஒரு  அழகிய வெள்ளை மலரை பறித்து வர சொன்னார். இருவரும் இந்த பாதையில் நடந்து சென்றனர். ஒரு இடத்தில், பாதை இரண்டாக பிரிந்தது. ஒரு மிகவும் தெளிவாக, எந்த பாதை இடர்பாடுகளும் இன்றி இருந்தது. இரண்டாவது பாதை, பாறைகள் மற்றும் பள்ளங்கள் என பல இடர்பாடுகள் கொண்டு இருந்தது.

முதன் மகன், தெளிவான பாதையையும், இரண்டாவது மகன் இடர்பாடுகள் நிறைந்த பாதையையும் தேர்ந்தெடுத்தனர். இறுதியில் இருவர் பாதையும் ஒரே இடத்தை அடைத்தது. அங்கு இரண்டு அழகிய வெள்ளை  பூக்கள் இருந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை எடுத்துக் கொண்டு தன் தந்தையை வந்தடைந்தனர்.

முதல் மகன், ‘ எந்த கஷ்டமும் இல்லாமல், எளிதில் இந்த மலரை பறித்து வந்துவிட்டேன்’ என பெருமையுடன் கூறினான். இரண்டாவது மகன், ‘பல இடர்பாடுகளை கடந்து இந்த மலரை பறித்து வந்துள்ளேன் என்றான். தந்தை இருவர் சொல்வதையும் அமைதியாக கேட்டுக் கொண்டார்.

மறுநாள், அடுத்த தேர்விற்கு இருவரையும் அழைத்தார்.

ஒரு சிறிய பள்ளத்தாக்கை கடந்து, அழகிய சிவப்பு மலரை பறித்து வர சொன்னார். முதல் மகன், முடியாது என தடுமாறி நின்றுவிட்டான். இரண்டாவது மகனோ எந்த கவலையும் இன்றி,பள்ளத்தை வேகமாக தாண்டி மலரை பறித்து வந்தான்.

இப்பொழுது, தந்தை தன் முதல் மகனை பார்த்து, நீ நேற்று அந்த இடர்பாடுகள் கொண்ட பாதையை தேர்ந்தெடுத்திருந்தால், இன்று உன்னால் இந்த தேர்வில் வெற்றி பெற்றிருக்க முடித்திருக்கும் என்றார்.

வாழ்வில் இடர்பாடுகள் வருவது, உங்களை மெருகேற்ற!  


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.