உங்களுடைய தன்னம்பிக்கை குறைய என்ன காரணம்? என நீங்க யோசிக்கறப்ப, சில காரணங்கள் மனதில் தோன்றும். இந்த காரணங்கள் பிறரின், சூழ்நிலையின் ஆதிக்கத்தை எதிர்க்க உங்களிடம் ‘மன வலுவில்லாததால்’ ஏற்பட்ட காரணங்களாக இருக்கும்.
ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமான ஆதிக்க சூழல் அவரவர் வாழ்க்கை முறைக்கேற்ப கண்டிப்பாக இருக்கும்.அனைவரும் இந்த ஆதிக்கத்தில் மன வலுவிழந்து போவது இல்லை. சிலர் மட்டும் மன வலுவிழந்து தன்னம்பிக்கை குறைந்து வாழறாங்க.
சூழ்நிலை ஆதிக்கத்தால் வீழ்ந்து விடாமல் தடுக்கும் ஆயுதமாக, எப்பொழுதும் தன்னம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தெரிந்த ஒரு தன்னம்பிக்கை ரகசியத்தை இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்துகோங்க.
உங்களுக்கு கீழே இருப்பவர் பல கோடி. ‘உங்களை நீங்களாகவே’ முழு மனத்தால் ஏற்றுக் கொள்ளும் பொழுது, புது தெம்பு கிடைக்கும். உங்களை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோணும் பொழுது, அந்த எண்ணங்களுக்கு “நோ” சொல்லுங்க. பின், உங்களை நீங்களே பாராட்டி மனதினுள் பேசுங்க.
உங்களை ஊக்குவிக்க என சில மனிதர்கள் இருப்பாங்க. அவர்கள் எப்பொழுதும் உங்கள் அருகில் இருக்கும் படி சூழலை அமைத்து, எதிர்மறை மனிதர்களை விட்டு முழுதும் விலகி இருக்கும் சூழலை அமைத்துக் கோங்க.
உங்களை பற்றிய சுய மதிப்பீடு இப்பொழுது உங்களுக்கு உயர ஆரம்பிக்கும். சுய மதிப்பீட்டை உயர்வாக வைத்திருப்பது தான் அந்த தன்னம்பிக்கை ரகசியம்.
எவ்விதமான நல்ல மாற்றத்தை நீங்க விரும்பறீங்களோ அந்த மாற்றத்துடன் கூடிய புது சுய மதிப்பீட்டுடன் நீங்க இருப்பது போல மனதில் உருவகப் படுத்துங்க.
உங்க உயரிய சுய மதிப்பீட்டை நிரூபிக்கும் விதமாக personality அ கொஞ்ச கொஞ்சமா மாற்றுங்க.
உங்களின் உள் இருந்து பிரதிபலிக்க வேண்டிய தன்னம்பிக்கையை வெளியில் இருந்து பெற முடியாது. இந்த புரிதலோடு சுய மதிப்பீட்டை உயர்த்துங்க.
உங்க சுய மதிப்பீட்டின் எல்லை, உங்க தன்னம்பிக்கையின் எல்லை. இந்த ரகசியத்தை புரிந்து செயல்படுங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.