ராமு தன் விவசாய நிலத்தில் வைக்கோல்களை நிரப்பி வைத்திருந்தார். பல நாட்களாக தான் மிகவும் விருப்பப்பட்டு அணிந்திருந்த கை கடிகாரத்தை இந்த வைக்கோல்களுக்கு இடையில் அவர் தவற விட்டுவிட்டார். எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் தன் கை கடிகாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
பல முயற்சிகளுக்கு பின், தன் நிலத்தின் அருகில் விளையாட வந்த சிறுவர்களை அழைத்து கை கடிகாரத்தை தேட சொன்னார். சிறுவர்கள் தீவிரமாக முயன்றும் கடிகாரம் அவருக்கு கிடைக்க வில்லை.
‘முயற்சியை கை விட்டு விடலாம்’ என அவர் நினைக்கும் பொழுது, சிறுவர்களில் ஒரு சிறுவன், ‘ஒரு முறை தேட வாய்ப்பு வேண்டும்’ என கேட்டான். சரி, முயற்சி செய்து பார் என ராமு அனுமதி வழங்கினார்.
சில நிமிடங்களில் அந்த சிறுவன் கை கடிகாரத்துடன் வந்தான்.
எப்படி இது சாத்தியம் ஆனது? என ராமு சிறுவனிடம் கேட்க,
‘கை கடிகாரத்தை தேடுவதற்கு பதிலாக, இந்த முறை வைக்கோல் அருகில் அமைதியாக அமர்ந்து விட்டேன். கை கடிகாரத்தின் டிக் டிக் சப்தம் காதுகளுக்கு கேட்டது. இந்த சப்தத்தை கவனித்து கை கடிகாரத்தை கண்டுபிடித்துவிட்டேன்’ என்றான் சிறுவன்.
நம் மனம் சூழலை அணுகும் விதம் மாறும் பொழுது, ஒரே யதார்த்த சூழல் வேறு போல தெரிவது யதார்த்தம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.