உங்களுக்கு என தனிப்பட்ட, குடும்பம் சார்ந்த, தொழில் சார்ந்த இலக்குகள் இருக்கும். ‘முதல் முயற்சிக்கே வெற்றி!’ சில சந்தர்ப்பங்களில் மட்டுமே அமையும். வெற்றிக்கு முன் தோல்விகள் அனைவர் வாழ்விலும் சகஜம். தோல்விகளை அவமானங்களாக கருதாமல் தோல்விகளுக்கு காரணமான தவறுகளை கண்டுபிடிங்க.
‘இந்த தவறுகளுக்கான மூல காரணங்கள் என்ன?’ என ஆராய்ந்து பாருங்க. இப்படி ஆராய்ச்சி செய்யும் பொழுது ஒருதலை பட்சம் இல்லாமல் நியாயத்திற்கு மதிப்பு கொடுங்க.வெவ்வேறு கோணங்களில் ஆராயும் பொழுது பலவிதமான காரணங்கள் புரிபடும். தவறுகளுக்காக இந்த காரணங்களை list போடுங்க.
ஒவ்வொரு காரணத்திற்குள்ளும் மிகப் பெரிய வாழ்க்கை படிப்பினை இருக்கும். இந்த வாழ்க்கை படிப்பினைக்கு முக்கியத்துவம் கொடுங்க. இந்த படிப்பினை தான், நீங்க அடைய இருக்கும் வெற்றிக்கான மூலதனம். தவறுகளை எந்த விதத்தில் திருத்தி கொள்ள வேண்டும் என்ற புரிதலை படிப்பினைகள் தெரியப்படுத்தும்.
இன்று பலர், இலக்குகளை ( goals ) அடைய முடியாமல் தவிக்கறாங்க. ஏதோ சில பல காரணங்களால் படிப்பினைகளை யோசிக்கவோ வாழ்க்கையில் பயன்படுத்தவோ மறந்திடறாங்க. பாதை மாற்றி அமைக்கப் படாத வரை ஏற்கனவே உள்ள பள்ளத்தில் தான் நீர் ஓடும். தவறுகளில் இருந்து கற்று கொள்ளும் பாடம் தான் சரியான பாதைக்கு வழிகாட்டும். அதனால் தவறுகளால் துவண்டு போகாமல் காரணங்களை கண்டுபிடித்து, படிப்பினை மூலமாக, அடுத்தமுறை தவறுகள் ஏற்படாமல் சரி செய்ய பாருங்க.
வாழ்க்கை குறுகியது. அவசர உலகம் இது. வேகமாக இலக்குகளை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம். நீங்க செய்த தவறுகளில் இருந்து மட்டும் இல்லாமல் பிறர் செய்த தவறுகளில் இருந்தும் படிப்பினைகளை கற்று கொள்ள எப்பொழுதும் விழிப்புடன் இருங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.