‘நெருக்கடி சிந்தனையை’ மேம்படுத்த, 5 குறிப்புகள்! 5 Tips To Improve Your Critical Thinking in Tamil | AsK LIFE Motivation

Critical Thinking Tamil Quotes

சாதாரணமாக பல முடிவுகளை எளிதில் சிந்திக்க முடிந்தாலும் ஒரு சில முடிவுகளை சில சூழலில் எடுக்க, 

நெருக்கடியாக மனதளவில் நீங்க உணர்ந்ததுண்டா? critical thinking, நெருக்கடி சிந்தனை மேம்பட்டு இருக்கும் பொழுது சரியான முடிவுகளை இந்த சூழல்களில் அமைத்துக் கொள்ள முடியும்.

குழுவில் உள்ள ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான முரண்பாடான கருத்துக்கள் இருக்கு.

மேலோட்டமாக பார்க்கும்போது அனைத்து கருத்துகளுமே சரிபோல இருந்தால் எந்த கருத்துக்களை சரியான தீர்வென மேலாளர் முடிவெடுக்க முடியும்? 

மாற்றத்திற்கு உள்ளாகி கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் சமுதாய மாற்றத்திற்கிடையில் வணிகத்தில் உள்ள ஒருவர் விற்பனையை அதிகரிக்க அல்லது செலவுகளைக் குறைக்க கணிப்பது எப்படி?

ஏற்கனவே சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனித்து அடுத்த சில மாதங்களிலோ, வருடங்களிலோ, சமுதாயத்தில் ஏற்பட இருக்கும் மாற்றத்தை முன்கூட்டியே கவனித்து தன் எதிர்காலத்தை சரியாக அமைத்துக் கொள்ள ஒரு கல்லூரி மாணவர் சிந்திப்பது எப்படி?

இது போன்ற அனைத்து சிந்தனைகளுக்கும் critical thinking திறன் மேம்பட்டு இருப்பது அவசியம்.

இந்த திறனை மேம்படுத்த தேவையான 5  குறிப்புகளை இப்ப பார்க்கலாம். குறிப்படுத்துக்கோங்க.

ஒரே நேர்கோட்டு பார்வையில் சிந்திக்காமல் பல கோணங்களில் பலவித வித்தியாசமான கேள்விகளை மனதில் எழுப்பி சிந்தியுங்க. எனக்கு ஏற்கனவே என்ன தெரியும்? இந்த விஷயங்கள் எப்படி தெரியும்?

இப்பொழுது என்ன நடந்து கொண்டுள்ளது? இது போல நடந்தால் நாளை என்ன ஆகும்? இது போல் பல வித்தியாசமான கேள்விகளை மனதில் எழுப்பி முதலில் சிந்தியுங்க.

இரண்டாவதாக, கேள்விகளுக்கு தக்க அனுமானங்களை மனதில் எழுப்புங்க. இந்த அனுமானங்கள் சரியா என மேலும் பல கேள்வி கணைகளை மனதில் எழுப்பி பல கோணங்களில் ஆராந்து பாருங்க.

மூன்றாவதாக, இப்படி ஆராயும் பொழுது எளிதான குறுக்கு வழி சிந்தனையை மனம் விரும்புவது இயல்பு.

இது போன்ற சிந்தனை ஆதிக்கத்திற்கு மனதளவில் இடம் கொடுக்காமல் சிந்தனை கடினமாக இருந்தாலும் பொறுமையால் சரியான சிந்தனைக்கு மனதை வழிநடத்துங்க.

நான்காவதாக, இப்படி சிந்திக்கும் பொழுது, a வின் காரணமாக தான் b நடந்தது என யோசிப்பதை தலைகீழாக மாற்றி யோசிக்கும் பொழுது பல கோணத்தில் சிந்திக்க முடியும்.

b யின் காரணமாக a நடந்திருந்தால்? என மாற்றி சிந்திக்கும் பழக்கத்தை கொண்டிருங்க.

சிந்தனை பலம் கூடும்.

ஐந்தாவதாக, இதே போல நீங்க சிந்திக்கும் விஷயம் போலவே அல்லது அதற்கு தேவையான ஏற்கனவே நடந்த பல உதாரணங்கள் நிரூபணத்தோடு பல இருக்கும். அவற்றை உங்க சிந்தனைக்கு நீங்க பயன்படுத்திக்கோங்க.

அனைத்து சூழலிலும் இப்படி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட போறதில்லை. நெருக்கடி சூழலின் அவசிய தேவைக்காக, critical thinking திறனை மேம்படுத்தி வைத்திருப்பது அவசியம்.

UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.