முடியாததை செய்வது எப்படி? How to Do the Impossible in Tamil | AsK LIFE Motivation

Do the Impossible Tamil Quote

ஸ்டீபன் ஹாக்கிங்க்கு, அவருடைய 22 ஆம் வயதில், ஒரு அரிய வகை நோய் ஏற்பட்டது.  நோயின் தீவிரம் நாட்பட அதிகரிக்க அதிகரிக்க, அவர் படிப்படியாக முடங்கினார். பேசும் திறனையும் இழந்தார். அவர் நீண்ட காலம் வாழ முடியாது என மருத்துவர்கள் கணித்தனர்.

ஆனால், அவரோ தன்னால் முடியும் என்ற எண்ண ஓட்டத்திற்கு வலிமை கொடுத்தார். சக்கர நாற்காலியைப் பயன்படுத்தினார். கையடக்க சுவிட்சைப் பயன்படுத்துவது, கன்னத்தின் தசையைப் பயன்படுத்துவது என, பேச்சை உருவாக்கும் கருவியின் மூலமாக பிறரிடம் தொடர்பு கொண்டார். 

உலக புகழ் மிக்க இயற்பியலாளர்களில் ஒருவராக வாழ்ந்து சரித்திரம் படைத்தார்.  தன் 76 வது வயது வரை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நோயுடன் உயிர் வாழ்ந்து காட்டினார்.

இவரின் வாழ்வில் ‘முடியாததை செய்து முடிக்க’ வைத்தது எது? 

மனதில் எல்லையற்ற நம்பிக்கை எண்ணங்கள் இருக்கும் பொழுது, முடியாததும் முடிந்து விடும்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.