ஒரு நாள் ஆமையும், நாயும் ஓட்ட பந்தயம் மற்றும் நீச்சல் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தன. நீண்ட நாட்கள் பயிற்சிக்கு பிறகு, அவர்கள் ஓட்ட பந்தயத்தை தொடங்கினர். நாய் எளிதாக வென்றது. ஆனாலும் ஆமை பந்தயத்தை முடித்துவிட்டது.அதற்கு அதிக நேரம் எடுத்தது. ஆனால் இருப்பினும் அதன் இலக்கை அடைந்தது.
ஒரு மாதத்திற்குப் பிறகு நீச்சல் போட்டி ஏரியில் நடந்தது. யார் வென்றார்கள் என உங்களால் யூகிக்க முடிகிறதா? சரி, ஆமை தான். நாய் அதன் இலக்கை மெதுவாக அடைந்தாலும் பந்தயத்தை முடித்தது.
இந்த ஆமையும் நாயும் போல எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆமை அல்லது நாய் ஒரு மராத்தானில் போட்டியிட முடியாது என்று அர்த்தமல்ல. எல்லோரும் தங்கள் இலக்குகளை அடைய முடியும்! நீங்கள் ஒரு பறவை என்றால், உங்களை ஒரு பாம்புடன் ஒப்பிட வேண்டாம்! உங்களுடைய சொந்த திறன்களையும் விருப்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு உங்களை மேம்படுத்தி கொள்ளுங்கள்….
உங்களை ஒருபோதும் பிறருடன் ஒப்பிடாதீர்கள். உங்களை உங்களுடனே ஒப்பிடுங்கள். சாதனை புரியுங்கள்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.