சந்திரன் மற்றும் ரகு இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். சந்திரன் ஒரு ஏழை விவசாயி. ரகு ஒரு பணக்காரர்.
சந்திரன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இரவில் அவருக்கு ஆழ்ந்த தூக்கம் இருந்தது. தனது வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூட அவர் ஒரு போதும் நினைத்ததில்லை. அவரிடம் பணம் இல்லை என்றாலும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.
ரகு எப்போதும் மிகவும் பதட்டமாக இருந்தார். அவரால் நன்றாக தூங்க முடியவில்லை. யாராவது ஒருவர் தனது பணப் பெட்டியை திறந்து தனது பணத்தை திருடி விட்டால் என்ன செய்வது? என இரவில் தனது வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி எப்போதும் தூக்கமின்றி கவலைப்பட்டார். அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்த சந்திரனை பார்த்து பொறாமைப்பட்டார்.
ஒரு நாள், ரகு சந்திரனை அழைத்து, அவருக்கு ஒரு பெட்டி நிறைய பணத்தை கொடுத்து, “என் அன்பு நண்பரே! நான் ஏராளமான செல்வங்களால் ஆசீர்வதிக்கப்படுகிறேன். நான் உங்களை வறுமையில் காண்கிறேன். எனவே, இந்த பணத்தை எடுத்து செழிப்புடன் வாழ்க. ” என கூறினார்.
சந்திரன் பணத்தை வாங்கி கொண்டு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். அவர் பகல் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தார். இரவு வந்தது. சந்திரன் வழக்கம் போல் படுக்கைக்குச் சென்றார். ஆனால், இன்று, அவரால் தூங்க முடியவில்லை. அவர் சென்று கதவுகளையும் ஜன்னல்களையும் மூடினார். இருப்பினும் தூங்க முடியவில்லை. அவர் பணப்பெட்டியைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார். இரவு முழுவதும் அவர் கலங்கினார்.
விடிந்தவுடன், சந்திரன் பணப்பெட்டியை ரகுவிடம் எடுத்துச் சென்றார். அவர் பெட்டியை ரகுவிடம் கொடுத்து விட்டு, “அன்புள்ள நண்பரே! நான் ஏழை. இருப்பினும், உங்கள் பணம் என்னிடமிருந்து என் மகிழ்ச்சியை பறித்து விட்டது. தயவுசெய்து உங்களுடைய பணத்தை நீங்கள் திரும்பப் பெற்று கொள்ளுங்கள். ” என்றார்.
பணம் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்கும் என்ற எண்ணம் மாயை எண்ணம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.