‘கம்பர்ட் ஜோன்’ ல் இருந்து, வெளியேற 4 குறிப்புகள்! How To Get Out Of The Box And Generate Ideas in Tamil | AsK LIFE Motivation

Get Out Of The Box Tamil Quotes

ஒரு சிறிய நகரத்தில், ஒரு வணிகர் தன் மகளுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு தொழில் அதிபரிடம் மிகப் பெரும் தொகையை கடனாக பெற்றிருந்தார். ஆனால், வணிகரால் கடனை திருப்ப செலுத்த இயலவில்லை. 

தொழில் அதிபர் வணிகரிடம், “நான் தங்களின் சூழலை மனதில் கொண்டு இரு ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளேன். என்னிடம் வெள்ளை  நிற மற்றும் கருப்பு நிற கற்கள் உள்ளது. அதனை என்னிடம் உள்ள இந்த பெட்டியில் போட்டு மூடி விடுவேன். இரண்டில் ஒன்றை உங்களுடைய மகள், தேர்ந்தெடுக்க வேண்டும். முதல் ஒப்பந்தமாக, கருப்பு நிற கல்லை அவர் தேர்ந்தெடுத்தால்,  அவர் என்னை மணமுடிக்க வேண்டும். இந்த கடன் தொகையை தாங்கள் செலுத்த தேவை இல்லை. இரண்டாவது ஒப்பந்தமாக, அவர் வெள்ளை  நிற கல்லை தேர்ந்தெடுத்தால், தாங்கள் கடன் தொகையை செலுத்த வேண்டியதில்லை மற்றும் தங்கள் மகள் என்னை மணமுடிக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்றார்.

‘தொழில் அதிபரின் சூழ்ச்சியை’ வணிகரும், அவரின் மகளும் உணர்ந்தனர். தொழில் அதிபரின் செய்கையை வணிகரின் மகள் தொழில் அதிபருக்கு தெரியாமல் கவனித்தார். தொழில் அதிபர், தன்னிடம் இருந்த  இரண்டு கருப்பு நிற கற்களை எடுத்து அந்த பெட்டிக்குள், யாரும் கவனிக்காமல் வைத்தார். ஆனால் வணிகரின் மகள் அதனை கவனித்துவிட்டார். ‘தனக்கு  தெரிந்தது போல’, அவர் எதையும் காட்டிக் கொள்ள வில்லை.

தொழிலதிபர் கூறியபடி, ‘அவற்றில் ஒரு கல்லை’ பெட்டியில் இருந்து அந்த பெண் எடுத்தார். கல்லை எடுக்கும் பொழுது, கீழே தரையில் தெரியாமல் போட்டு விட்டது போல கல்லை தரையில் போட்டார். தரையில் ஒரு கல் வெள்ளை நிறத்திலும், மற்றொரு கல் கருப்பு நிறத்திலும் இருந்தது. 

‘இவற்றில் எந்த கல்லை, தான் கீழே போட்டேன் என எனக்கு தெரிய வில்லை, எனக்கு ஒரு திட்டம் உள்ளது. பெட்டியின் உள்ளே, எந்த நிற கல் உள்ளதோ, அதற்கு மாறான கல்லை நான் எடுத்ததாக முடிவிற்கு வருவோம்’ என்றார் வணிகரின் மகள்.

பெட்டியில் கருப்பு நிற கல் தான் இருந்தாக வேண்டும். வெள்ளை நிற கல்லை, தான் எடுத்ததாக நிரூபித்து, விவரமாக இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வந்தார் அந்த பெண். தொழில் அதிபர், செய்வது அறியாமல் தடுமாறினார்.

சூழலை அதன் போக்கிலேயே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லைக்கு வெளியில் ( Out Of The Box Thinking ) இருந்து சிந்திக்கும் பொழுது, சூழலை பல கோணங்களில் எதிர்கொண்டு சமாளிக்க முடியும்.  

UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.