உங்களால் எளிதாக கட்டுப்படுத்த கூடிய உங்களுக்கு தெரிந்த சூழலில் நீங்கள் இருப்பது, ‘கவலை, மன அழுத்தம் குறைந்த நிலையில் நீங்கள் வாழ்க்கை வாழ’, வசதியாக இருப்பது போல உங்களுக்கு தோனலாம்.
உண்மையில், நீங்கள் உங்கள் கம்பர்ட் ஜோனை விட்டு வெளியேறாமல் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மேம்பாடு தடைபடும்.
உங்களுடைய இப்போதைய மகிழ்ச்சி அற்ற வாழ்க்கைக்கு நீங்க உங்க ‘கம்பர்ட் ஜோனை’ விட்டு வெளியேறாமல் இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.
நீங்க உங்க ‘கம்பர்ட் ஜோனை’ விட்டு வெளியேற 4 குறிப்புகள் இருக்கு. அவற்றை இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.
‘கம்பர்ட் ஜோனை’ விட்டு வெளியேற நினைக்கும் பொழுது முதலில் மிக பயமாக இருக்கும்.
காரணம்: மனக் கற்பனையில், கடக்க வேண்டிய எதிர்கொள்ள வேண்டிய அனைத்துப் படிகளையும் ஒன்று போல பார்க்கும் பொழுது எதிர்கொள்ள போதுமான சக்தி இல்லாதது போன்ற உணர்வு ஏற்படுவதால் தான்.
முதலில், ‘கம்பர்ட் ஜோனை’ விட்டு வெளியேற தேவையான அனைத்துப் படிகளையும் உள்ளடக்கிய மன திட்டத்தை போடுங்க.
இதில் முதல் படியை மட்டும் முதலில் மனதில் நினைத்து செய்ய வேண்டிய செயலை செய்ய ஆரம்பிங்க.
குறைந்த பய உணர்வில் செயலை செய்ய ஆரம்பித்து அதனை வெற்றியுடன் முடிக்கும் பொழுது அடுத்த படிக்கு செல்ல உற்சாகம் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு படியாக கடக்கும் பொழுது இறுதியில் நீங்க ‘கம்பர்ட் ஜோனை’ விட்டு வெளியேறி மேம்பாடு அடைய ஆரம்பித்து இருப்பீங்க.
ஒவ்வொருமுறை முடிவெடுக்கும் பொழுதும் கம்பர்ட் ஜோனில் இருப்பதால் இருக்கும் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், வெளிவருவதால் ஏற்படும் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், வேறுபாடு என்ன என யோசியுங்க.
‘இலக்கை நோக்கி பயணப்படும் கார் ஓட்டுநர் பாதையை கடக்க கடக்க தெளிவடைவது போல’, புது சூழலுக்கு தேவையான தெளிவு, ஒவ்வொரு படிநிலையை கடக்க கடக்க அதிகப்படியாக கிடைக்க ஆரம்பிக்கும்.
செய்ய வேண்டிய செயல் அதிக தயக்கத்தை பயத்தை ( fear ) ஏற்படுத்தினாலும், அதிகப் படியான வாழ்க்கை மேம்பாட்டிற்கு கம்பர்ட் ஜோனை விட்டு வெளியேறுவது அவசியமெனில், ‘முதல் முக்கியத்துவத்தை’ இந்த செயலுக்கு கொடுங்க.
மாற்றங்கள் ஒன்றே மாறாதது. வாழ்க்கை மேம்பட ‘கம்பர்ட் ஜோனை’ விட்டு வெளிவர எப்பொழுதும் தயாராக இருங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.