மாட் கோலின்ஸ்கி, ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான சமையல்காரர். 2011, டிசம்பர் 26 ஆம் ஆண்டு, குயின்ஸ்லாந்தில் இருந்த அவர் வீட்டில், அவரின் 39 ஆவது வயதில், மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இவரின் மனைவியும், மூன்று இளம் மகள்களும் தீயில் கருகி இறந்தனர். இவர்களை காப்பாற்ற முயன்ற மாட்டும், உடலில் 40% க்கும் அதிகமான தீக்காயங்களுக்கு ஆளானார்.
இந்த விபத்தின் விளைவால், மாட் அடுத்து வந்த இரண்டு மாதங்களும் கோமாவில் இருந்தார். அவர் உயிர் பிழைப்பாரா? என மருத்துவர்களுக்கு உறுதியாக தெரியவில்லை. இந்த பேராபத்தை கடந்து, மாட் உயிர் பிழைத்து வந்தார். இந்த வலி, காயங்கள், மனைவி குழந்தைகளை இழந்த மீள இயலா வேதனைகள், அனைத்தும் மாட்டின் வாழ்வில் மிக கடினமான நேரங்கள்.
இந்த தருணத்திலும், மாட், “நான் இன்று உயிருடன் இருப்பதற்கு, நன்றியுள்ளவனாக நினைக்கிறேன். நான் இனிவரும் எதிர்காலத்தில், என் மனைவி மற்றும் குழந்தைகளை பெருமைப்படுத்தும் ஒரு வாழ்க்கையை வாழ முற்றிலும் முயல்வேன்.” என்றார். அதே போன்று வாழ்ந்தும் வருகிறார். தன் பணத்தின் ஒரு பகுதியை, நன்கொடையாக பிறருக்கு வழங்கியும் வருகிறார்.
கடினமான நேரங்களில் துவண்டு விடுபவர், வாழ்க்கையும் துவண்டு விடும். எதிர்கொண்டு மீள்பவர், அசாத்திய திறனுடன் அற்புதம் படைப்பார்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.