பேச்சாளர் ஒருவர் பார்வையாளர்கள் 300 பேரிடம் தன் கைகளில் இருந்த 2000 ரூபாய் தாளை காட்டி யாருக்காவது இந்த பணம் வேண்டுமா? என கேட்டார்.
300 பார்வையாளர்களும் தனக்கு வேண்டும் என கைகளை தூக்கினர்.
அவர், “நான் இந்த பணத்தை ஒருவருக்கு கொடுக்கப் போகிறேன், ஆனால் முதலில்….” என கூறிக் கொண்டே அவர் பணத்தை கசக்கத் தொடங்கினார்.
யாருக்காவது இந்த பணம் வேண்டுமா? என அவர் மீண்டும் கூட்டத்தினரிடம் கேட்டார்.
அனைத்து 300 கைகளும் மேலே உயர்ந்தன.
பின்னர் பேச்சாளர் பணத்தை தரையில் போட்டு, அதை முழுவதும் மிதித்தார்.
பின்னர் அவர் பணத்தை கூட்டத்தினரிடம் உயர்த்தி காட்டினார். அசுத்தமான பணமாக இருந்தது.
“இப்போது யாராவது இந்த பணத்தை விரும்புகிறார்களா?” என கேட்டார்.
ஒவ்வொரு கையும் மேலே உயர்ந்தது.
பணத்தை அழிக்க அவர் என்ன செய்தாலும், பார்வையாளர்கள் மேலும் அதை விரும்பினர், ஏனெனில் ‘அதன் மதிப்பு அப்படியே இருக்கிறது’ என பேச்சாளர் கூட்டத்தினரிடம் கூறினார். இந்த பணம் இன்னும் 2000 ரூபாய் மதிப்புடையது.
இதே போல தான், போதும் போதும் என்ற அளவிற்கு நீங்க என்ன தான் வாழ்வில் அடிப்பட்டாலும் உங்கள் மதிப்பு அப்படியே இருக்கும். உங்களிடமிருந்து யாரும் பறித்திட முடியாத சிறப்பு அம்சம் உங்களிடம் உள்ளது.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.