ஒரு கிராமத்தில் இரண்டு விதமான குணாதசியங்கள் கொண்ட இளைஞர்கள் இருந்தனர். ஒருவருக்கு அனுபவ அறிவு மிக அதிகம். வாழ்க்கையில் பல பிரச்னைகளை எதிர்கொண்டவர். இன்னொருவருக்கு எந்த வித அனுபவ அறிவும் கிடையாது. இருப்பினும், உலகியல் சார்ந்த பல புத்தகங்களை புரிந்து, படித்து தேர்ந்திருந்தார்.
இதுவரை எதிர்கொள்ளாத சூறாவளி கிராமத்தை தாக்கியது. மக்களின் நிலங்கள் பாழானது. நிலங்களை எப்படி மீட்டெடுப்பது என புரியாமல், மக்கள் திகைத்து நின்ற நேரத்தில்,
இரு இளைஞர்களும் களத்தில் இறங்கினர். முதல் இளைஞர் தன் அனுபவத்தை பயன்படுத்தியும், இரண்டாவது
இளைஞர் தன்னிடம் இருந்த ஞானத்தை பயன்படுத்தியும் நிலங்களை பழைய நிலைமைக்கு மக்களுக்கு மீட்டு கொடுத்தனர். கிராம மக்கள் அவர்களின் அறிவை கண்டு வியந்தனர்.
அறிவை பல விதங்களில் பெறலாம். தக்க காலங்களில் பயன் பட கூடிய வகைகளில், சரியான விதத்திலான அறிவு நிலை உயர்வு காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.