இந்த நொடியை சரியான விதத்தில் பயன்படுத்துபவறால் மட்டும் தான் எதிர்காலத்தை சிறப்புடையதாக மாற்ற முடியும். இந்த நொடிகளின் ‘கட்டுமானம்’ தான் எதிர்காலம்.
கனத்த மழை. அர்ஜுன் தன் எதிர்காலத்தை பற்றிய எண்ணத்திலேயே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஒன்பது அடி உயரம், நீர் தேங்கி உள்ள ஒரு ஆழமான பள்ளத்தில் தவறி விழுந்து விட்டார்.
அதிர்ச்சியில், உதவிக்கு ஆட்களை அழைத்து கதறினார். இந்த கதறலை கேட்ட ஊர் ஆட்கள், வேகமாக ஓடிவந்து அர்ஜுனை காப்பாற்றினர். காப்பாற்றியவரில் ஒருவர், சாலையை சரியாக கவனித்து நடந்திருந்தால், இப்படி நடந்திருக்குமா? என்றார்.
அப்பொழுது தான், நிகழ்காலத்தை சரியாக வாழும் பொழுது, எதிர்காலம் சரியாக அமையும் என்று அர்ஜுனுக்கு புரிந்தது.
நிகழ்காலத்தை சரியான விதத்தில் அமைத்துக் கொள்ள என்ன செய்யனும் என யோசியுங்க.
உங்களுடைய சுய முன்னேற்றதிற்காக நிகழ்காலத்தை பயன்படுத்தலாம்.
தேவையற்ற, அதிகப்படியான யோசனையை தவிர்த்து நிகழ்காலத்தை வாழலாம்.
குறிக்கோள், வாழ்க்கை நோக்கத்தை அடைய நிகழ்காலத்தை பயன்படுத்தலாம்.
தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்டு வாழலாம்.
நேர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் தொடர்பு கொண்டு வாழலாம்.
உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நிகழ்காலத்தை பயன்படுத்தலாம்.
கடின உழைப்புக்கு பதிலாக smart ஆக சரியான விதத்தில் நேர திட்டமிடல் செய்து நிகழ்காலத்தை வாழலாம்.
நல்ல முதலீட்டில் நேரத்தை செலவிடலாம். சரியான விதத்தில் சேமிக்கலாம்.
இப்படி நிகழ்காலத்தை நீங்க சரியான விதத்தில் அமைத்து வாழும் பொழுது, எதிர்காலம் தானாக சிறப்புடையதாக மாறி விடும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.