Mental Strength Tamil Quote

வலிமையில், இரண்டு வகைகள். ஒன்று உடல் வலிமை, மற்றொன்று மன வலிமை. மன வலிமை இல்லாமல், உடல் வலிமை இல்லை.

மன வலிமையற்ற சாதனைகள் உண்டா? ‘மீள முடியாது’ என நம்பப்பட்ட பல சரித்திர நிகழ்வுகளை,  ‘மன வலிமை’ வெற்றிகளாக மாற்றி உள்ளது. 

ஜான் ராம்ப்ளிங் என்ற பொறியியலாளர், 1883 ஆம் வருடம், அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் லாங் தீவை இணைக்கும் ‘ஒரு பெரிய பாலம்’ கட்ட விருப்பப்பட, இது போன்ற முட்டாள் தனமாக வேலை இருக்க முடியாது  என அனைவரும் கேலி செய்தனர். ஆனால், அவரோ, தன் மகன் வாஷிங்டன்னுடன், முடியும் என்ற நம்பிக்கையுடன், பாலம் கட்ட தயாரானார். இருவரும், இந்த பாலத்தின் நூற்றுக்கணக்கான வரைபடங்களைத் தயாரித்து, இந்த வேலையில் ஏற்படும் ஒவ்வொரு இடையூறுக்கும் தீர்வு காணத் தொடங்கினர்.

சவாலான மற்றும் கிட்டத்தட்ட சாத்தியமற்ற பணியில் அவர் ஈடுபட்டார். வேலை நன்றாக நடந்து கொண்டிருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு, கட்டுமான இடத்தில் நடந்த ஒரு விபத்தில் ஜான் ராம்ப்ளிங் இறந்தார். அவரது மகன் வாஷிங்டன்னால், நடக்கவும் பேசவும் முடியவில்லை. உடல் இயலாமையில் இருக்கும் பொழுது கூட, வாஷிங்டன் சோர்வடையவில்லை.  உடல் ஊனமுற்ற பின்னரும், அவர் தன் தந்தையின் கனவை, மன வலிமையுடன் நிறைவேற்றினார். அற்புதமான ‘புரூக்ளின் பாலம்’ உருவானது. 

‘மன வலிமை இருந்தால், முடியாததையும் முடித்து காட்ட முடியும்’ என்பதை உணர்த்தும் உண்மை கதை இது.

UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.