உசேன் போல்ட், 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் 100 மீட்டர் இறுதிப் போட்டியைப் பார்த்தபோது, தான் ஒரு நாள் உலகின் அதிவேக மனிதராக தான் ஆக வேண்டும் என தீர்மானித்தார். இந்த முடிவிற்குப் பிறகு, அவர் தனது நேரத்தையும் ஆற்றலையும் போட்டியில் வெற்றிபெற பயிற்சியெடுக்க பயன்படுத்தினார்.
ஆனால், அவருக்கு கடுமையான ஸ்கோலியோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் மீண்டும் ஒருபோதும் போட்டியிட முடியாது என்று மருத்துவர் கூறினார். போல்ட் தன் முயற்சியை கைவிடவில்லை. முதுகு நல்ல நிலையில் இருக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.
2015 ஆம் ஆண்டில் பீக்கிங் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீ இறுதிப் போட்டியில் ஜஸ்டின் கேட்லினுக்கு எதிராக போல்ட் போட்டியிட்டார். கேட்லின் அவரது மிகச்சிறந்த உடல் நிலையில் இருந்தார். அவர் சீசனில் அனைத்து போட்டிகளிலும் வென்றிருந்தார். போல்ட் நல்ல நிலையில் இல்லை. அவருக்கு நிறைய முதுகுவலி பிரச்சினைகள் இருந்தன. கேட்லின், போல்ட்டை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அரையிறுதியில் கேட்லின் மிக வேகமாக ஓடினார். தொடக்கத்தில் கிட்டத்தட்ட வீழ்ந்து, தனது அரையிறுதி ஓட்டத்தை கைவிடும் அளவு போல்ட் ஓடினார். இருப்பினும், அவரால் இன்னும் இறுதிப் போட்டிக்கு வர முடிந்தது. கேட்லின் மற்றும் போல்ட் இருவருக்கும் இறுதிப் போட்டிகள் சிறப்பாகத் தொடங்கின. கேட்லிங் 90 மீட்டர் வரை, ஓட்டப்பந்தயத்தில் முன்னிலை வகித்தார், அவரது ஓட்டத்தை முறியடித்து போல்ட் அவரை விட முன்னேறினார். போல்ட் கடைசி வரை தனது நிலையை நிலைநிறுத்தி, பந்தயத்தை ஒரு நொடியில் நூறில் ஒரு பங்கு வென்றார்!
போல்டின் வெற்றிக்கு காரணமான அவருடைய மனநிலை என்ன என யோசித்துப் பாருங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.