ஒரு வீட்டின் முதலாளி, ஒரு நாயையும் பூனையையும் வளர்த்து வந்தார். நாய் எப்பொழுதும் வாழ்க்கையை அவநம்பிக்கையுடன் பார்த்தது. பூனை எப்பொழுதும் நம்பிக்கையுடன் வாழ்க்கையை பார்த்தது.
ஒரு நாள், முதலாளி இரண்டையும் அழைத்து, நான் உங்கள் இருவருக்கும் தோட்டத்தில் பரிசு பொருட்களை மண்ணின் அடியில் ஒளித்து வைத்துள்ளேன். எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
நாய் தோட்டத்தை ஏற இறங்க பார்த்துவிட்டு, பரிசாவது ஒன்றாவது, எனக்கெங்கே பரிசு கிடைக்கப் போகிறது என அவநம்பிக்கையில் படுத்து விட்டது. ஆனால், பூனையோ நம்பிக்கையுடன், தோட்டம் முழுவதும் தோண்டி பார்த்தது. இறுதியில் அதன் கண்களில் இரண்டு அழகிய பந்துக்கள் விளையாட தென்பட்டது.
ஒன்றுக்கு இரண்டு என பூனை பரிசுகளை பார்த்து மகிழ்ந்தது. நாயோ ஏமாற்றத்தில் நொந்து கொண்டது.
அவநம்பிக்கையுடன் சிந்திப்பவர்கள் முன்பு எத்தனை வாய்ப்புகள் இருந்தாலும் பயனற்றது.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.