பெஞ்சமின் ஃபிராங்க்ளின், அமெரிக்க மேதையான இவர் தான் ஒரு புத்திசாலி என அறிந்திருந்தார். ‘எல்லாவற்றையும் ஒருவர் சரியாக புரிந்திருக்க முடியாது’ என்ற புத்திசாலிதன கருத்தையும் இவர் கொண்டிருந்தார்.
அதனால், தான் ஒரு வாதத்தை முன்வைக்கும் போதெல்லாம், “நான் தவறாக இருக்கலாம், ஆனால்…” என்ற வரியுடன் ஒன்றை கூற ஆரம்பிப்பார். இவருடைய இந்த அணுகுமுறை, மக்களுடனான கருத்து வேறுபாடுகளை இவர் குறைக்க காரணமாக அமைந்தது. அதுமட்டும் இன்றி, புதிய யோசனைகளுக்கு உளவியல் ரீதியாக தன்னை முன்னிலை படுத்தி கொள்ள இந்த அணுகுமுறை இவருக்கு உதவியது.
பிறர் கண்ணோட்டங்களுக்கும் மரியாதை கொடுத்தல்,
அளவுக்கதிகமான தன்னம்பிக்கை அற்று இருப்பது,
ஈகோவை அறிவிலிருந்து பிரித்தறிய தெரிந்திருப்பது,
தன் கருத்தை மாற்றி கொள்வதில் காட்டும் ஆர்வம்
இந்த குணநலன்கள் திறந்த மனதுடன் ஒருவர் செயல்பட தேவை.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.