மல்லிகா ஒரு கிராமத்துப் பெண். படிப்பறிவில்லாதப் பெண் அவள். தனக்கு வரப் போகும் கணவர், ‘எந்த வேலையில் இருந்தாலும் சரி, நகரவாசியாக இருந்து விட்டால் போதும்!’ என நினைத்தாள். அவள் நினைத்தது போல, மதன் என்ற சென்னைவாசி மல்லிகாவை திருமணம் செய்ய முன் வந்தார். அவருக்கு வருமானம் மிக சொற்பம். ‘வரவுக்கு மீறிய செலவு செய்யாமல், மல்லிகா குடும்பம் நடத்தினால் போதும்!’ என்ற ஒரே ஒரு எதிர்பார்ப்பு மதனுக்கு.
இருவருக்கும் இடையில் அனைத்துப் பொருத்தங்களும் பார்த்தாயிற்று. ‘தன் கனவை நனவாக்கும் தகுதி, வரப் போகும் துணைக்கு உள்ளதா?’ என்ற அனைத்து ஆராய்ச்சிகளும் இருவருக்கும் இடையில் முடிந்து விட்டது. படிப்பு, அழகு, தொழில், பணம், ஜாதகம் என அனைத்து பொருத்தமும் பார்த்து, அதனுடன் மனப் பொருத்தமும் பார்த்து திருமணம் நடந்தது.
இருந்தாலும், ஆரம்பத்தில் சரியாக போன திருமண வாழ்க்கை, நாள் ஆக ஆக பிரச்சனையில் முடிந்தது.
இதற்கான காரணம் என்ன?
இதற்கான முக்கிய காரணம், “இருவருக்கு இடையேயும் ஒருவருக்கொருவர் இருக்க வேண்டிய ‘நேர்மை’ இல்லாமல் போனது.”
ஓசை வர இரண்டு கைகளும் தட்டப் பட வேண்டும். திருமண வாழ்க்கை சரியாக அமைய இரண்டு தரப்பிற்கு இடையேயும் நேர்மை வேண்டும் .
நீங்க காரில் பயணிக்கறீங்க. நீங்க காரை ஓட்டறீங்க. பயணத்தின் பொழுது, நீங்க மட்டும் சரியாக வண்டியை ஓடினால் போதுமா? எதிர் தரப்பில் வரும் வண்டியும் சரியாக காரை ஓட்டனும்.
ஒரு தரப்பில் ஓட்டுனரின் நேர்மை தவறினாலும், சேதாரம் என்னவோ இரண்டு தரப்பிலும் தான். வாழ்க்கைப் பயணமும் இதைப் போன்றதே!
திருமண வாழ்க்கை நன்கு அமைய கணவர் மனைவிக்கு இடையில் மனப் பொருத்தத்தை தாண்டிய, நேர்மை தேவை படுகிறது.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.