உங்க செயல்களை நீங்க தினம் வித்தியாசமாக, நேர்மறையாக செய்யும் பொழுது உங்களுக்குள் நேர்மறை மாற்றங்கள் ஏற்படுவதை நாட்பட உணர்வீங்க. இந்த நேர்மறை சிந்தனைகளால் நேர்மறை வாழ்க்கை மாறுதல்களும் நாட்பட ஏற்படும்.
சிந்தனையில் நேர்மறை மாற்றத்தை பெற 5 வழிமுறைகள் இருக்கு. அவற்றை இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.
உங்களை சுற்றி உள்ள நீங்க அதிக நேரம் செலவழிக்கும் ‘சாதாரண, எதிர்மறை’ மனிதர்களுக்கு பதிலாக வேறு புதிய நேர்மறை மனிதர்களுடன் பழகி பாருங்க. உங்க சிந்தனைகளில் நேர்மறை மாற்றங்கள் ஏற்படும்.
நீங்க தினம் படிக்கும் சாதாரண புத்தங்ககளை நேர்மறை புத்தகங்களாக மாற்றி பாருங்க. உங்க சிந்தனைகளில் மாற்றங்கள் தெரியும்.
பார்ப்பது, கேட்பது, பேசுவது அனைத்தையும் நேர்மறையாக நீங்க மாற்றும் பொழுது சிந்தனையும் நேர்மறையாக இருக்கும்.
நீங்க இருக்கும் இடம் நேர்மறை இடமாக மாறும் பொழுது சிந்தனைகள் நேர்மறையாக மாறும்.
இது இல்லை, அது இல்லை இவர் சரி இல்லை, அவர் சரி இல்லை என குறைப்படுவதை நிறுத்தி விட்டு, இவ்வளவு உள்ளது இந்தளவாவது சரியாக உள்ளாரே என நீங்க நேர்மறையாக மனதில் நினைக்கும் பொழுது நேர்மறை சிந்தனையை பெறுவீங்க.
நேற்றை விட இன்று ‘என்ன சிறிதளவேனும், வித்தியாசமாக நேர்மறையாக செய்தீங்க?’ என யோசித்து பாருங்க. நேற்றை விட இன்று, இன்றை விட நாளை, நாளை விட நாளை மறுநாள் என ஒரு சின்ன முன்னேற்றத்திற்கு உரிய நேர்மறையான புதிய வித்தியாசமான செயலாவது தினம் செய்யுங்க. தின முன்னேற்றம் அமையும். வாழ்க்கை மாறுதல்கள் தென்படும்.
வித்தியாசமான செயலை நீங்க செய்யும் பொழுது என்ன செயல் செய்யறீங்க? என்பதை விட ‘எதனின் மேல் செயல் செய்யறீங்க?’ என்பதற்கு முக்கியத்துவம் கொடுங்க.
எப்பொழுதும் குளிராக இருக்கும் நகரத்தில் வெயில்கால ஆடைகளை விற்க முற்படுவதும் வித்தியாசமான செயல் தான். ‘குளிர் நகரத்தில்’ இதனை நீங்க செய்யும் பொழுது? எதிர்மறை வாழ்க்கை மாற்றம் ஏற்படும்.
நீங்க ‘1000 ரூபாய்’ கடன் கொடுப்பது நல்ல செயலாக இருக்கலாம். “யாருக்கு,எதற்கு?” என்பது மிக முக்கியம்.
தவறான பொழுதுபோக்கிற்காக என்பதை விட அவசர தேவையில் இருப்பவருக்கு என நீங்க இந்த கடனை கொடுக்கும் பொழுது உங்க வாழ்க்கை மாறுதல்கள் நேர்மறையான விதத்தில் இருக்கும் செயல்களை நேர்மறையான விதத்தில் வித்தியாசமாக செய்யுங்க. நேர்மறை சிந்தனை மாற்றமும், நேர்மறை வாழ்க்கை மாற்றங்களும் ஏற்படும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.