Introverts ன் சக்தியை வெளி உலகம் சரியாக புரிந்ததில்லை. ஏன்? Introverts கூட, சரியாக அவங்களோட சக்தியை புரிந்துள்ளார்களா? என்பது சந்தேகம்!
மக்களுடன் நெருங்கி பழகுபவர்கள், பேசுபவர்கள் மட்டும் தான் ‘வெற்றியடைய விரும்புகிறார்கள்.
வாழ்வில் முன்னேறும் மனப்பான்மை இவர்களுக்கு மட்டும் தான் இருக்கு’ என்ற தவறான கணிப்பு பெரும்பான்மையான மக்களிடம் இருக்கு.
இந்த கணிப்பு உண்மை எனில் introverts ஆன Warren Buffett, Bill Gates, Einstein இவர்களால் வெற்றி அடைத்திருக்க முடியாது.
Introvert ஆன உங்களுக்குள் வெளியே தெரியாமல் மறைந்துள்ள ‘ஆற்றல் மிக்க முக்கிய திறமைகள்’ இருக்கு.
அவற்றை பற்றி இப்ப நாம பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.
மிகப் பெரிய சிந்தனையாளர் நீங்க. மிக அதிக sensitive ஆன குணம் உங்களுக்கு இருப்பதால் எந்த ஒரு தகவலும் உங்களை அதிகமாக யோசிக்க வைக்க தூண்டும். உங்களுடைய சிந்தனையை மிக நல்ல விஷயங்களுக்காக நீங்க அமைத்துக் கொள்ளும் பொழுது மிகப் பெரிய விதத்திலான முன்னேற்றத்திற்குரிய மாற்றத்தை உங்களால் ஏற்படுத்த முடியும்.
மிகப் பெரிய படைப்பாளி நீங்க.
‘மிக முக்கியமான தகவல்கள் சார்ந்த’ உங்களுடைய மன சிந்தனைக்கு ஆக்க பூர்வமான செயலாக்கம் கொடுக்கும் உரையாடல்களே introvert ஆன உங்கள ஈர்க்கும். ‘முக்கியமற்ற சின்ன சின்ன சாதாரண உரையாடுங்கள்’ உங்களுக்கு பிடிக்காது. வாழ்க்கை சார்ந்த, மதிப்புகள் மிக்க, நெறிமிக்க,
ஆழமான உரையாடல்களில் ஈடுபடுபவர்கள் introverts. இதை புரிந்து நீங்க செயல்படும் பொழுது.
மிகப் பெரிய படைப்பாளியா நீங்க இருப்பீங்க.
தகவல்களை மிக தெளிவாக பார்க்கும் உங்களுடைய பொறுமையான கண்ணோட்டம் சிக்கலான பிரச்சனைகளுக்கு சரியாக தீர்வுகள் காணும் திறமையை உங்களுக்கு கொடுக்கும். மிக சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வுகள் காண உங்களால் முடியும்.
பிறருடனான தொடர்பு ஆழமாக அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என நினைப்பவர் நீங்க. அதனால் அர்த்தமுள்ள, வலுவான தொடர்பை உங்களால் பிறரிடம் ஏற்படுத்த முடியும்.
உள்ளுணர்வின் மேல் அதிக நம்பிக்கை கொண்டவர் நீங்க. உங்களுடைய உள்ளுணர்வு வலுவுடையதாக இருக்கும்.
முன்கூட்டிய திட்டமிடுதலை மிக சரியாக செய்து, செய்யும் வேலையை சிறப்பாக, structured ஆ உங்களால் செய்ய முடியும்.
‘உங்களோட வலிமைமிக்க இந்த திறமைகளை நீங்க உணர்ந்து செயல்படும் பொழுது உங்க சக்தியை உங்களால் உணர முடியும். சமுதாயத்திற்கும் நிரூபிக்க முடியும்.’
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.