பண்டைய காலத்தில் ராஜா ஒருவர், மக்களுக்காக தான் அமைத்த சாலையில் கற்பாறை ஒன்றை வைத்தார். பின்னர் அவர் மறைவான இடத்தில் சென்று மறைந்து கொண்டு, யாராவது கற்பாறையை சாலை தடத்திலிருந்து நகர்த்துவாரா? என்று பார்த்தார். ராஜாவின் செல்வந்த வணிகர்கள் மற்றும் பிரபுக்களில் சிலர், கற்பாறையை சுற்றி நடந்தார்கள்.
‘சாலையை தெளிவாக வைத்திருக்கவில்லை’ என அவர்கள் சத்தமாக ராஜாவை குற்றம் சாட்டினர். ஆனால் அவர்களில் யாரும் கல்லை சாலையில் இருந்து நகற்ற முயலவில்லை. அவர்கள் பணி இதுவல்ல என்பது போல சென்றுவிட்டனர்.
விவசாயி ஒருவர் காய்கறிகளை சுமந்து கொண்டு அந்த சாலை வழியே வந்தார். கற்பாறையை நெருங்கியதும், விவசாயி தனது சுமையை கீழே வைத்து விட்டு, கல்லை சாலையிலிருந்து வெளியே தள்ள முயன்றார். அதிக அழுத்தம் மற்றும் சிரமத்திற்குப் பிறகு, அவர் இறுதியாக வெற்றி பெற்றார்.
விவசாயி தனது காய்கறிகளை திரும்பிச் சென்று எடுக்க முயன்ற பொழுது, சாலையில் கற்பாறை இருந்த இடத்தில் ஒரு பணப்பை கிடப்பதைக் கவனித்தார்.
பணப்பையில் பல தங்க நாணயங்கள் இருந்தன. ‘சாலையிலிருந்து பாறாங்கல்லை அகற்றும் நபருக்கு இந்த தங்க நாணயங்கள்’ என மன்னரின் குறிப்பு ஒன்று அங்கே இருந்தது.
இந்த பாதையில் இருந்த தடங்களைப் போல, வாழ்வில் பல தடங்கல்கள் ஏற்படும். தடங்கல்களை நீக்கும் பொழுது வெற்றி கிடைக்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.