கோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது.
அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில் இருந்த யானைப் பாகனிடம் , ” உங்களால் , எப்படி இவ்வளவு பெரிய மிருகத்தை, ஒரு சிறு கயிரினால் கட்டிப் போட முடிகிறது . ஓடி விடாதா ? எப்படி இங்கேயே நிற்கிறது ?” என்று கேட்டார் .
அதற்கு அந்த பாகன் , ” இந்த யானை சிறு வயதாக இருந்த பொழுது, கட்டி வைத்த கயிறு இது . அப்பொழுது , பல முறை தப்பிச் செல்ல முயற்சி செய்யும் . அந்த வயதில் , இதனால் இக்கயிறை அறுத்துக் கொண்டு , ஓட இயல வில்லை. இந்த யானை அதே நம்பிக்கையில் , ‘இன்றும் தன்னால் இயலாது’ என , எந்த முயற்சியும் செய்யாமல் , இந்த ஒற்றை கயிருக்கு கட்டுண்டு உள்ளது.” என்றார்.
இந்த யானையைப் போன்று, என்றோ ஒருநாள் கிடைத்த தோல்வியை மனதில் கொண்டு, அடுத்த முயற்சியை என்றும் செய்யாமல் , வாழும் மனிதர்கள் நம்மில் எத்தனைப் பேர் ?
எத்தனை முறை தோற்றாலும், ஒரு சிறு மாறுதல் கூட, வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். தேவையோ தன்னம்பிக்கை.
– Uma, Life Coac
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.