ஆழ்மனம் அற்புத சக்தி வாய்ந்தது. உங்களுடைய நம்பிக்கைகள், முந்தைய அனுபவம், நினைவுகள் மற்றும் திறமைகள் இவையனைத்தும் அடங்கியுள்ள இடம் ஆழ்மனம். நீங்கள் பார்த்த, செய்த அல்லது நினைத்த அனைத்து நினைவுகளும் உள்ள இடம் ஆழ்மனம்.
ஆழ்மனம் உங்கள் வழிகாட்டி. உங்களுடைய உணர்ச்சிகளை கண்காணித்து, தகவல்களை மேல் மனதில் இருந்து பெறுவதும், அடங்கியுள்ள தகவல்களை தேவைப்படும் பொழுது மேல் மனதிற்கு அனுப்புவதும் ஆழ்மனதின் வேலைகளில் ஒன்று.
மேல்மனதில் இருந்து ஆழ்மனதை தொடர்புகொள்ள உணர்ச்சிகளை மட்டும் தான் பயன்படுத்த முடியும். வெறுப்பு, கோபம், பொறாமை மற்றும் கவலை இவை போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆழ்மனதை பாழ்படுத்துகிறது.
நீங்க அடுத்தநாள் காலை 5 மணிக்கு எழுந்திரிக்கனும் என நினைத்து இரவு உறங்க சென்று, முடியாமல் போன அனுபவமோ? ஏதேனும் கெட்ட பழக்கத்தை விட்டு விடலாம் என நினைத்தோ? இனி கோபப் பட கூடாது என நினைத்தோ? முடியாமல் போன அனுபவமோ? உங்களுக்கு உண்டா?
இதற்கான உண்மையான காரணம், நீங்க சாதாரண மன நிலையில் இருக்கும் பொழுது, 5 மணிக்கு எழுந்திரிக்கனும், கெட்ட பழக்கத்தை விட்டு விடனும், இனி கோபப் பட கூடாது என மேல் மனதிற்கு கட்டளைகளை இடறீங்க. ஆனால், ஆழ்மனதில் வேறு எண்ணங்கள் உள்ளது. இந்த வேறுபாட்டால் ஆசை நிறைவேறுவது இல்லை.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.